செய்திகள் :

புனே: லிப்ட் கதவில் 1.5 மணி நேரம் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு; என்ன நடந்தது?

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சின்காட் ரோடு பகுதியில் உள்ள ரித்தி சித்தி குடியிருப்பு கட்டிடத்தில் சைலேஷ்(7) என்ற சிறுவன் தனது பெற்றோடு வசித்து வந்தான்.

அவன் கட்டிடத்திற்குக் கீழே வந்து தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். இரவு 10 மணிக்கு இரண்டாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்க்குச் செல்வதற்காக சிறுவன் லிப்டில் ஏறினான். ஆனால் லிப்ட் இரண்டாவது மாடியை நெருங்கும் முன்பாக நின்றுவிட்டது.

சிறுவன் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வர முயன்றபோது லிப்ட் கிரில் கதவுக்கும், லிப்ட்டிற்கு வெளியில் இருக்கும் கதவுக்கும் இடையில் சிறுவன் சிக்கிக்கொண்டார்.

சிறுவனைக் காணாமல் அவனது பெற்றோர் பல இடங்களில் தேடினர். அதில் ஒருசிலர் லிப்ட் நடுவழியில் சிக்கி இருப்பதைக் கவனித்தனர். இதையடுத்து லிப்ட் நின்ற இடத்திற்க்குச் சென்றபோது உள்ளே சிறுவன் சிக்கி இருந்தான். இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து லிப்ட் கதவைத் திறந்து சிறுவனை மீட்டு உடனே மருத்துவனையில் சேர்த்தனர். ஆனால் சிறுவன் அதற்குள் உயிரிழந்துவிட்டான். சிறுவன் ஒன்றரை மணி நேரம் லிப்டில் கிரில் கதவு மற்றும் லிப்ட் வாசல் கதவு இடையே சிக்கி இருந்ததால் உயிரிழக்க நேரிட்டது.

ஆனாலும் சிறுவனின் மரணத்திற்காகக் காரணம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுவன் லிப்டில் சிக்கிக்கொண்டபோது உதவி கேட்டு அவன் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மும்பை: ஒரு கி.மீ. தூரத்தைக் குறைக்க குறுக்கு வழி; லாரி மீது கண்டெய்னர் மோதி 13 பேர் பலி

மும்பை அருகில் உள்ள தகானு தனிவாரி என்ற இடத்தில் லாரி ஒன்று திருமணத்திற்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் 50 பேர் இருந்தனர். மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்... மேலும் பார்க்க

ஈரோடு: குடும்பத்துடன் குளிக்கச் சென்ற இடத்தில் சோகம் - பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்

நாமக்கல் மாவட்டம் அவிநாசி பட்டியைச் சேர்ந்த தறிப்பட்டைறை தொழிலாளியான பெருமாள், மனைவி, குழந்தைகளுடன் பரமத்தி வேலூர் சித்தம்பூண்டிக்குச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குடும்பமாகச... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து: பயணிகள் வெளியேற்றம்; என்ன நடந்தது?

முற்றிலும் ஏ.சி.பெட்டிகளைக் கொண்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நாட்டின் தலைநகரில் இருந்து மாநிலத் தலைநகரங்களுக்கு இயக்கப்படுகிறது. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நிஜாமுதினுக்கு... மேலும் பார்க்க

பிரபல ரெளடி பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு வைத்த மது விருந்து பார்ட்டி - விபத்தில் 2 பேர் பலி!

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தளபதி(36). திருவையாறு, நடுக்காவேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்கள் திருடி வந்த... மேலும் பார்க்க

ஆட்டுக்குட்டியை மீட்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுமி - செல்போன் சிக்னலை வைத்து மீட்ட காவல்துறை

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் தனுசியா (14). இவர், மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். இந்நிலைய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி, 13 பேர் காயம்

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் ஒடிந்து விழுந்தது. ஜாட் நகருக்கு அருகில் உள்ள மொடெவாடி என்ற கிராமத்தில் இருக்கும் கோய... மேலும் பார்க்க