செய்திகள் :

மும்பை: ஒரு கி.மீ. தூரத்தைக் குறைக்க குறுக்கு வழி; லாரி மீது கண்டெய்னர் மோதி 13 பேர் பலி

post image

மும்பை அருகில் உள்ள தகானு தனிவாரி என்ற இடத்தில் லாரி ஒன்று திருமணத்திற்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் 50 பேர் இருந்தனர்.

மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரி சாலையின் அடுத்த பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அப்படி செல்ல யுடெர்ன் எடுக்க ஒரு கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். அந்த ஒரு கிலோமீட்டர் தூரத்தைச் சேமிப்பதற்காக லாரி டிரைவர் வாகனத்தைத் தவறான வழியில் ஓட்டினார்.

அந்நேரம் அந்த வழியாக டிரைலர் லாரி ஒன்று எதிர் திசையில் இருந்து வந்தது. அந்த டிரைலர் லாரி திருமண கோஷ்டி சென்ற லாரி மீது மோதிக்கொண்டது. அதோடு அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனமும் இதில் மோதிக்கொண்டது. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் கிராமத்து மக்கள் ஓடி வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

டிரைலர் லாரியின் கண்டெய்னர் திருமண கோஷ்டி சென்ற வாகனம் மீது மோதியதில் அந்த வாகனம் கடுமையாகச் சேதம் அடைந்தது. போலீஸாரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டதில் 13 பேர் உயிரிழந்திருந்தனர்.

மேலும் 27 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 16 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''சம்பவம் சாலையின் வளைவான பகுதியில் நடந்துள்ளது. எதிரில் லாரி வந்ததை டிரைலர் லாரி டிரைவர் கவனிக்கவில்லை என்று தெரிவித்தார். திருமண நிச்சயதார்த்தம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றபோது இந்த விபத்து நடந்தது.

இவ்விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு: குடும்பத்துடன் குளிக்கச் சென்ற இடத்தில் சோகம் - பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்

நாமக்கல் மாவட்டம் அவிநாசி பட்டியைச் சேர்ந்த தறிப்பட்டைறை தொழிலாளியான பெருமாள், மனைவி, குழந்தைகளுடன் பரமத்தி வேலூர் சித்தம்பூண்டிக்குச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குடும்பமாகச... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து: பயணிகள் வெளியேற்றம்; என்ன நடந்தது?

முற்றிலும் ஏ.சி.பெட்டிகளைக் கொண்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நாட்டின் தலைநகரில் இருந்து மாநிலத் தலைநகரங்களுக்கு இயக்கப்படுகிறது. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நிஜாமுதினுக்கு... மேலும் பார்க்க

பிரபல ரெளடி பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு வைத்த மது விருந்து பார்ட்டி - விபத்தில் 2 பேர் பலி!

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தளபதி(36). திருவையாறு, நடுக்காவேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்கள் திருடி வந்த... மேலும் பார்க்க

ஆட்டுக்குட்டியை மீட்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுமி - செல்போன் சிக்னலை வைத்து மீட்ட காவல்துறை

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் தனுசியா (14). இவர், மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். இந்நிலைய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி, 13 பேர் காயம்

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் ஒடிந்து விழுந்தது. ஜாட் நகருக்கு அருகில் உள்ள மொடெவாடி என்ற கிராமத்தில் இருக்கும் கோய... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: கார் மீது லாரி மோதி கோர விபத்து; 4 பேர் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஷித் (12) மற்றும் உறவினர் சினேகா (23) ஆகியோர் உடன் ஒரு காரில் பொள்ளாச்சி பகுதிக்க... மேலும் பார்க்க