CSK vs SRH: “அடுத்த ஆண்டு புதிய சிஎஸ்கேவாக மீண்டெழுவோம்!” - கேப்டன் ருதுராஜ் நம...
Iran: "கத்தார், சவுதி, அமீரகம் கேட்டுகொண்டதால் தற்காலிக போர் நிறுத்தம்; ஆனால்..."- ட்ரம்ப் அறிவிப்பு
"ஈரானுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு வேகமாகச் செயல்படுவது அவர்களுக்கு நல்லது.
இல்லையென்றால் அவர்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். நேரம் மிக மிக முக்கியமானது!" என்று நேற்று ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இந்நிலையில், இன்று தற்போது ஈரான் மீதான போரைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகப் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது...
"கத்தார் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானி, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோர், ஈரான் இஸ்லாமியக் குடியரசு மீது நாளை நடத்தத் திட்டமிட்டிருந்த ராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், சிறந்த தலைவர்களும் எங்களது கூட்டாளிகளுமான அவர்களின் கருத்துப்படி—அமெரிக்காவிற்கும், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் பிற உலக நாடுகளுக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்படிக்கை எட்டப்படும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
முக்கியமாக, இந்த உடன்படிக்கையின்படி 'ஈரானிடம் அணு ஆயுதங்கள் எதுவும் இருக்காது!'
மேற்கூறிய தலைவர்கள் மீது நான் வைத்துள்ள மரியாதையின் அடிப்படையில், நாளை ஈரானின் மீது நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்தும்படி பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத், கூட்டுப் படைத்தளபதிகளின் தலைவர் ஜெனரல் டேனியல் கெய்ன் மற்றும் அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.
அதே சமயம், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்படிக்கை எட்டப்படாத பட்சத்தில், உத்தரவு கிடைத்த அடுத்த கணமே ஈரான் மீது முழு அளவிலான மிகப்பெரிய தாக்குதலைத் தொடுக்கத் தயாராக இருக்குமாறும் அவர்களுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளேன்"














