செய்திகள் :

கோவை இருகூர் கொடூரம்: ``பெற்றோரும், ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்!

post image

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமுமுக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்து பதிவிட்டிருக்கின்றனர். இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது. பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

கோவை

குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும். பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``எங்களுக்கும் பேச தெரியும்; அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்..!" - மாணிக்கம் தாக்கூர்

திருச்செந்தூர் தொகுதி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சி மற்றும் அரசியல் எதிரிகளை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். அவரின் உரையி... மேலும் பார்க்க

``இரட்டை கொலை; ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை; பொய்க்கால் குதிரை அரசே..!" - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அ... மேலும் பார்க்க

“சமூக நீதி மண் என்று சொன்னாலும், அவ்வளவு எளிதாக ஒரு தலித் இங்கு முதல்வர் ஆகிவிட முடியாது”- திருமா

"பெரியார் மண் என்று சொன்னாலும் தமிழகத்தில் அவ்வளவு இலகுவாக தலித் முதல்வராக முடியாது" என்று திருமாவளவன் பேசியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக - அதிமுக கூ... மேலும் பார்க்க

‘இதுதான் உங்களது நாகரிக அரசியலா ஜோசப் விஜய்?’ – வானதி சீனிவாசன் சாடல்!

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டுகூட தெரிவி... மேலும் பார்க்க

'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?' - நெதர்லாந்து பிரதமருக்கு இந்தியா தக்க பதில்

இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி என ஐந்து நாடுகள் பயணத்தை மே 15 முதல் மே 20 வரை மேற்கொண்டிருக்கிறார். மோடி நெதர்லாந்து செல்வதற்கு முன்பு, அவரது பயணம் குறி... மேலும் பார்க்க

`இந்திய ரூபாய்-ன் வீழ்ச்சியை அரசு கண்டும் காணாமலும் இருப்பது இதனால்தான்' - நிபுணர் சொல்வதென்ன?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. தற்போது சந்தையில் ஒரு டாலருக்கு ரூ.96-ஐ தாண்டி வர்த்தகம் ஆகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், வ... மேலும் பார்க்க