செய்திகள் :

CSK vs SRH: “அடுத்த ஆண்டு புதிய சிஎஸ்கேவாக மீண்டெழுவோம்!” - கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை

post image

ஐபில் தொடரில் நேற்று (மே-18) நடைபெற்ற சென்னை vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டி சென்னை அணிக்கு ஒரு வாழ்வா, சாவா போட்டியாக பார்க்கப்பட்ட போதிலும், 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சென்னை அணி. இதன் மூலம் பிளே ஆப் வாய்ப்பும் கிட்டத்தட்ட முடிந்தது.

csk
csk

இந்தத் தோல்விக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ருதுராஜ், “ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும், நெருக்கமாகவும் சென்றது. 20 ஓவர் போட்டிக்கு இது ஒரு நல்ல பிட்ச். ஆட்டம் முழுவதும் பிட்ச்சின் தன்மை மாறவே இல்லை. இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு 180 ரன்கள் என்பது ஒரு நல்ல சவாலான இலக்குதான்.

சில வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டாலும், எங்கள் வீரர்களின் போராட்டக் குணத்தை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். ஒரு விக்கெட்டை வீழ்த்திய உடனே, அந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி எதிரணிக்கு அடுத்தடுத்து அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதை இன்று எங்களால் செய்ய முடியாமல் போனதே பின்னடைவு.

எங்களிடம் சில முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும், இருந்த வீரர்களை வைத்து எங்களால் முடிந்த சிறந்த காம்பினேஷனுடன் சிறப்பாகவே போராடினோம். அனைவரும் தங்கள் முழு உழைப்பையும் கொடுத்தனர்.

அணியில் நிறைய நேர்மறையான விஷயங்கள் உள்ளன. சஞ்சு சாம்சனின் வருகை அணிக்கு மிகப்பெரிய பலம். அவர் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். கார்த்திக் சர்மாவும் இன்றும் ஒரு அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்

காயத்தால் சில முக்கிய வீரர்களைத் தவறவிட்டது உண்மைதான். நிச்சயமாக நாங்கள் ஒரு புதிய அணியைக் கட்டமைத்து வருகிறோம்.

இந்தச் சீசனில் சொந்த மைதானத்தில் சில போட்டிகளில் தோற்றிருந்தாலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாங்கள் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு இன்னும் பலமான, ஒரு புதிய சிஎஸ்கே அணியாக நிச்சயம் மீண்டெழுவோம்,” என்று பேசியிருந்தார்.

IPL: ஆர்சிபி முதலிடம்; பஞ்சாப்பிற்கு சறுக்கல்! - ப்ளே ஆஃப் மேடையை அலங்கரிக்கப்போகும் அணிகள் எவை?

2026 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக கம்பீரமாக நிற்க, மீதமுள்ள 3 இடங்களுக்கான பலப்பரீட்சை... மேலும் பார்க்க

'டாப்-4 இடத்திற்கான பட்டியலில் இருப்பதற்கு எங்களுக்கு தகுதியில்லை'- ரியான் பராக் கூறியது என்ன?

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.17) ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. ப்ளே-ஆஃப... மேலும் பார்க்க

DC vs RR: ஸ்டார்க் வீசிய 'ஒற்றை' ஓவர்... ராஜஸ்தானின் ப்ளே ஆஃப் கனவு எங்கோ!

தொடரின் தொடக்கத்தில் வரிசையாக வெல்வதும் இறுதியில் தோல்விமுகத்தோடு தத்தளிப்பதும் ராஜஸ்தானுக்கே கைவந்த கலை.முதல் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோற்றிருந்த ராஜஸ்தான், அடுத்து வந்த ஐந்து போட்டிகளில் ஒன... மேலும் பார்க்க

"என் 200-வது IPL போட்டியில் விளையாடும் திறமையை கடவுள் கொடுத்திருக்கிறார்" - ஆட்டநாயகன் சுனில் நரேன்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.16) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய சுனில் நரேன் ஆட்டநாய... மேலும் பார்க்க

"அசாதாரணமான LSG பேட்டிங், சிரமப்பட்ட CSK பேட்டிங்..." - தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்

ஐபிஎல் 2026 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த... மேலும் பார்க்க

PBKS vs MI: "இந்தத் தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை!" - பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் வருத்தம்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே-14) ஆட்டத்தில் பஞ்சாப் vs மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை மும்பை அணி வீழ்த்தியிருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகள... மேலும் பார்க்க