செய்திகள் :

'குறைஞ்ச சம்பளம் தானே'னு வருமானம் கணக்குத் தாக்கல் செய்யாமல் இருந்தா, கடன்.? | பணம் வளர்ப்போம்

post image

'குறைவாக தான் வருமானம் வாங்குகிறேன்... நான் ஏன் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்? செய்யாமல் போனால் என்ன தவறு?' - இப்படி பல கேள்விகள் நம்மிடையே இருக்கிறது.

நம்முடைய கேள்விகளுக்கு பதிலும், வருமான வரிக் கணக்கை ஏன் தாக்கல் செய்ய வேண்டும் என்பதையும் கூறுகிறார் ஆடிட்டர் கிரி பாபு.

"இந்தியாவில் அனைத்து வருமானதாரர்களுக்குமே ஸ்லாப்கள் உள்ளது. அதனால், வருமான வரித் தாக்கல் செய்வது அவசியம்.

ஆடிட்டர் கிரி பாபு
ஆடிட்டர் கிரி பாபு

'நான் வருமான வரி செலுத்த வேண்டாம்' என்று நாம் தான் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், மறைமுகமாக எங்கேயாவது நமக்கு வரி பிடித்தம் செய்யப்பட்டிருக்கும்... வரிக் கட்டியிருப்போம்.

உதாரணத்திற்கு, வங்கியில் இருந்து நமக்கு வட்டி வந்திருக்கலாம்... ஏதேனும் ஒரு சொத்தை விற்றிருப்பீர்கள்... அதற்காக TDS பிடித்திருப்பார்கள். அதனால், அப்போதே நாம் வருமான வரிக் கணக்கின் கீழ் வந்துவிடுவோம்.

அதனால், எப்போதுமே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுவது நல்லது.

அடுத்ததாக, கடன் வாங்கும்போதும், வெளிநாடுகளுக்கு செல்லும் போது, வருமான வரிக் கணக்குத் தாக்கலைக் கேட்பார்கள். அதற்காக கடைசி நேரத்தில் அலையாமல், ஆரம்பத்தில் இருந்தே பக்காவாக வைத்துக்கொள்வது நமக்கு தான் நன்மை.

அரசு வேலையில் இருக்கும் பலரும், எனக்கு அரசாங்கம் வரிக் கட்டிவிடும். நான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய தேவையில்லை என்று நினைக்கிறார்கள். அது தவறு. அரசாங்கம் யாருக்காகவும் வரிக் கட்டாது. அவரவர் வரியை அவர்கள் தான் கட்ட வேண்டும்.

உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் கூட இருந்திருக்கலாம். கணக்குத் தாக்கல் செய்யாததால், அது உங்களுக்கு திரும்ப கிடைக்காமலே போய்விடும். அதனால், முன்பே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுவது நல்லது".

100%, 50%, 25%, 10%... முதலீட்டில் உங்கள் லாபத்தை எப்படி கணக்கிடுவது என்று தெரியுமா?

''லாபத்தை சரியாகக் கணக்கிடுவது எப்படி என்று கற்றுக்கொள்ளவா வேண்டும்? அதுகூடவா நாங்கள் தெரியாமல் இருக்கிறோம்...'' இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு இப்படி கேட்கத் தோன்றும்.''ஒரு முதல... மேலும் பார்க்க

Retirement: அரசு ஊழியர்களே! ஓய்வுக்காலத்துக்குப் பின் உங்களை யார் காப்பாற்றுவார்கள்?

நீங்கள் அரசு ஊழியரா?பணி ஒய்வு பெறப்போகும் அந்தக் கடைசி நாளை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?கடந்த முப்பது வருடங்களாக உங்கள் வாழ்க்கை ஒரு அழகான தாள லயத்தில் இயங்கி இருக்கும். ஒவ்வொரு மாதமும் ... மேலும் பார்க்க

வருமான வரித் தாக்கல் செய்யும் போது, Form 16 மட்டுமல்ல; Form 26AS ரொம்ப முக்கியம் | பணம் வளர்ப்போம்

இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதனால், பலர் ஆடிட்டர்களைத் தேடி ஓடுவதில்லை. அவர்களாகவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுகின்றனர். அதனால், அனைவரும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் குறித்த... மேலும் பார்க்க

NRI: லாபத்தை சரியாக கணக்கிட கற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிடில், தவறான திட்டங்களில் பணத்தை இழப்பீர்கள்!

''லாபத்தை சரியாகக் கணக்கிடுவது எப்படி என்று கற்றுக்கொள்ளவா வேண்டும்? அதுகூடவா நாங்கள் தெரியாமல் இருக்கிறோம்...'' இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு இப்படி கேட்கத் தோன்றும்.''ஒரு முதல... மேலும் பார்க்க

புதுசு, பழசு - இந்த நிதியாண்டிற்கு எந்த வருமான வரி முறை நல்ல சாய்ஸ்? | பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இ... மேலும் பார்க்க

எவ்வளவு தொகை கையில் இருந்தால் நீங்கள் நிதிச் சுதந்திரம் அடையலாம்? | Download Free SWP Calculator

நாம் அனைவரும் வாழ்வில் ஒரு கட்டத்தில் நிதிச் சுதந்திரத்தை (Financial Freedom) அடைய விரும்புகிறோம். ஆனால், நிஜமான நிதிச் சுதந்திரம் என்றால் என்ன? விலையுயர்ந்த கார், பெரிய வீடு, ஆடம்பரமான வாழ்க்கை... இவ... மேலும் பார்க்க