Startup சாகசம் 61 : ‘இறக்குமதிதான் தரம்’ என்ற மாயையை உடைத்த உள்ளூர் ஸ்டார்ட்அப் ...
"பட்டியலின மக்களின் அரசியலைப் பேசிய இயக்கத்தின் கைகளுக்கு..." - வன்னியரசை வாழ்த்திய பா.ரஞ்சித்
தவெக அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விசிக வன்னியரசுக்கும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் ஐ.யு.எம்.எல் ஷாஜகானுக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை உணர்ந்து, பட்டியலின மக்களின் அரசியலைப் பேசி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு இன்று அது வந்திருக்கிறது.
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் உரிமைகளையும் மையமாக வைத்து, இத்துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாகச் செயல்பட வேண்டும்.
அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு அவர்கள் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் ஐயுஎம்எல் கட்சியைச் சேர்ந்த தோழர் ஷாஜகான் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இதைச் சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருக்கிறார்.















