செய்திகள் :

MK Stalin: "கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்" - ஸ்டாலின் வேண்டுகோள்

post image

தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்றைய தினம் 23 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தவெக ஆட்சியமைத்ததற்கு வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டைத் தொடர்ந்து தற்போது தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் இடம்பெற்றிருக்கிறது.

திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

விசிக Vs திமுக
விசிக Vs திமுக

அமைச்சரவையில் பங்கேற்பதாக நேற்று அறிவித்ததிலிருந்து திமுகவினர், விசிகவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விசிகவை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா போட்ட பதிவிற்குப் பல்வேறு பக்கங்களிலிருந்தும் கண்டனங்கள் வலுத்தன.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் விசிக அமைச்சரவையில் பங்கேற்றிருப்பது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர், "மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசு அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!

தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.

பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம்.

நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் 'குழந்தைத் திருமணம்' - அப்போ, ஹெல்ப் லைன், கடுமையான சட்டங்களின் பயன்?

இந்தியாவில் பெண் 18 வயதிற்கு உட்பட்டவராகவும், ஆண் 21 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குத் திருமணம் நடந்தால், அது 'குழந்தைத் திருமணம்' என்று அழைக்கப்படுகிறது. குழந்தைத் திருமணங்கள... மேலும் பார்க்க

3-வது ஆட்சியின் 2-ம் ஆண்டு நிறைவு: "பயோகேஸ் நோக்கி இந்தியா நகர வேண்டும்" - பிரதமர் அறிவுறுத்தல்

பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் இரண்டாவது ஆண்டு ஜூன் 9-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான மத்திய அமைச... மேலும் பார்க்க

கோவையில் டாஸ்மாக் மூடலால் கல்லா கட்டும் FL 2 பார்! - சட்ட சிக்கலை தவிர்க்க நூதன முயற்சி? | Exclusive

த.வெ.க. அரசு பொறுப்பேற்ற உடன் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள 717 டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி டாஸ்மாக் கடைகள் மூ... மேலும் பார்க்க

TVK Minister: மொபைல் கடை உரிமையாளர் டு போக்குவரத்துத்துறை அமைச்சர்! - யார் இந்த தமிழன் பார்த்திபன்?

சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக களமிறங்கிய விஜய் தமிழன் பார்த்திபன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில்... மேலும் பார்க்க

இந்திய ரூபாய் மதிப்பு 2026-ம் ஆண்டில் ரூ.100-க்கு சரியாது, ஆனால், எது வரை போகும்?

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது தினச் செய்தியாக மாறி வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.96-க்கு கீழ் இறங்கியுள்ளது. இவ்வளவு வேகமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து... மேலும் பார்க்க

அன்று கட்சிக்குள் வெடித்த பூகம்பம்; டெல்லி நெருக்கம்! - உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனின் பின்னணி

தமிழக வெற்றி கழகத்தின் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்று இருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கபட்டிருக்கிறது. குறிப்பாக மேலூர் பொதுத் தொக... மேலும் பார்க்க