செய்திகள் :

TVK Minister: மொபைல் கடை உரிமையாளர் டு போக்குவரத்துத்துறை அமைச்சர்! - யார் இந்த தமிழன் பார்த்திபன்?

post image

சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக களமிறங்கிய விஜய் தமிழன் பார்த்திபன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.

அமைச்சர் தமிழன் பார்த்திபன்

யார் இந்த விஜய் தமிழன் பார்த்திபன்?

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் தமிழின் பார்த்திபன். 12 - ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், சேலத்தில் சாதாரணமாக செல்போன் கடை ஒன்றை தொடங்கி நடத்த ஆரம்பித்திருக்கிறார். விஜயின் தீவிர ரசிகரான இவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயுடன் பயணித்து வருகிறார்.

சேலம் மாவட்டத்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகியாக நீண்ட காலம் செயல்பட்டு வந்த இவர், த.வெ.க - வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். விஜய் மீதான நட்பால் ஆரம்பகாலத்தில் விஜய் நடித்த திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றிருக்கிறார் இந்த தமிழன் பார்த்திபன்.

இந்திய ரூபாய் மதிப்பு 2026-ம் ஆண்டில் ரூ.100-க்கு சரியாது, ஆனால், எது வரை போகும்?

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது தினச் செய்தியாக மாறி வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.96-க்கு கீழ் இறங்கியுள்ளது. இவ்வளவு வேகமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து... மேலும் பார்க்க

அன்று கட்சிக்குள் வெடித்த பூகம்பம்; டெல்லி நெருக்கம்! - உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனின் பின்னணி

தமிழக வெற்றி கழகத்தின் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்று இருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கபட்டிருக்கிறது. குறிப்பாக மேலூர் பொதுத் தொக... மேலும் பார்க்க

கடன் பெற்றவர்களுக்கு 'மரியாதை': கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகளுக்கு RBI வழிகாட்டுதல்கள்! | 15 Points

கடன் வாங்கியவர்களுக்கும், கடன் வாங்க உள்ளவர்களுக்கு உள்ள பெரும் பயமே 'கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து திட்டிவிடுவார்களோ' என்பது தான். இங்கே பலரால் சூழல்களால் தான் கடன் தவணையைக் கட்ட முடியாமல் போய்வ... மேலும் பார்க்க

தேனி: அரசு மருத்துவமனை வார்டுகளில் சுற்றித் திரியும் எலிகள்; நோயாளிகள் அச்சம்!

தேனி மாவட்டம், கானா விலக்கில், அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தேனி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கேரளம் மாநிலத்தில் இருந்தும் நாள்தோறும்... மேலும் பார்க்க

தவெக அமைச்சரவையில் இடம்பெறும் திருமாவளவன்? திருச்சி கிழக்கில் இடைத் தேர்தலில் போட்டியா?

த.வெ.க அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்புவிடுத்த நிலையில், வி.சி.க சார்பில் அதன் தலைவர் திருமாவளவனே அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்கிறார்கள... மேலும் பார்க்க

ஆந்திரா: `நீண்டகாலத் திட்டமிடல் இல்லாமல் வெறுமனே...' - விவாதத்துக்குள்ளாகும் அரசின் திட்டம்!

மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டபோது, தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால், பெரும் சிக்கலுக்கு உள்ளாகின. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த த... மேலும் பார்க்க