செய்திகள் :

கடன் பெற்றவர்களுக்கு 'மரியாதை': கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகளுக்கு RBI வழிகாட்டுதல்கள்! | 15 Points

post image

கடன் வாங்கியவர்களுக்கும், கடன் வாங்க உள்ளவர்களுக்கு உள்ள பெரும் பயமே 'கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து திட்டிவிடுவார்களோ' என்பது தான்.

இங்கே பலரால் சூழல்களால் தான் கடன் தவணையைக் கட்ட முடியாமல் போய்விடுகிறது.

இதனால், கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகள் வீட்டிற்கு வந்து தாறுமாறாக திட்டுவது தான் அனைவருக்கும் பயம்.

இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, கடன் வசூல் செய்வதற்கும், கடன் வசூல் செய்யும் ஏஜென்ட்டுகளுக்கும் திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

இந்திய ரிசர்வ் வங்கி | RBI
இந்திய ரிசர்வ் வங்கி | RBI

அவை...

1. சரியில்லாத முறையில் கடன் வசூலிக்கப்படுவதால், கடன் பெற்றவர்களுக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு வங்கிகள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

2. கடனை வசூலிக்கும் ஒவ்வொரு ஏஜென்ட்டுகளிடமும் கட்டாயம் IIBF சான்றிதழ் இருக்க வேண்டும்.

3. வங்கிகள் தங்களுடைய வலைதளம் மற்றும் ஆப்களில் தங்களது கடன் வசூலிக்கும் ஏஜென்சிகளின் பெயரை வெளியிட வேண்டும்.

4. ஏஜென்ட்டுகள் முதல்முறை கடன் பெற்றவர்களை சந்திக்கச் செல்லும் போது, அது சம்பந்தமான வங்கிகள் கடன் பெற்றவர்களுக்கு 'நோட்டிபிக்கேஷன்' தர வேண்டும்.

5. ஏஜென்ட்டுகளை மாற்றினாலோ, பணி நீக்கம் செய்தாலோ, அது குறித்து கடன் பெற்றவர்களுக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும்.

6. வங்கிகள் ஏஜென்ட்டுகளின் போன் கால்களை ரெக்கார்ட் செய்ய வேண்டும். குறைந்தது ஆறு மாதங்களுக்கு அந்த போன் கால் ரெக்கார்டிங்கை வங்கிகள் மெயின்டெயின் செய்ய வேண்டும்.

7. கடன்களைத் திரும்ப வசூலித்தால் ஏஜென்ட்டுகளுக்கு இன்சென்டிவ் வழங்கப்படுவது இனி ரத்து.

8. கடன் பெற்றவர்களின் பொருள்கள் அல்லது சொத்துகளை பறிமுதல் செய்யப்படுவதற்கான பாதுகாப்பான நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

 கடன் | loan
கடன் | loan

9. கடன் பெற்று மொபைல் போன், டேப்லெட், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவை வாங்கப்பட்டிருந்து, அதன் தவணைகளை 90 நாள்களுக்கு மேல் கட்டவில்லை என்றால் தான், அந்த சாதனத்தை வங்கிகள் 'disable' செய்ய வேண்டும்.

10. ஒரு சாதனத்தை Disable செய்வதற்கு முன்பு, 21 நாள்கள் + ஏழு நாள்கள் நோட்டீஸ் வழங்க வேண்டும்.

11. ஒரு சாதனம் தவறாக பிளாக் செய்யப்பட்டால், கடன் பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மணிநேரத்திற்கும் வங்கிகள் ரூ.250 வழங்க வேண்டும்.

12. ஏஜென்ட்டுகள் கடன் வசூலிக்க செல்லும் போது ஐ.டி மற்றும் அங்கீகார கடிதத்தை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

13. ஏஜென்ட்டுகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் வசூலிப்பதற்கான போன் கால்களைச் செய்ய வேண்டும்.

14. வசூல் சம்பந்தமான புகார்களுக்கு, பிரத்யேக குறைதீர்ப்புப் பிரிவை வங்கிகள் அமைக்க வேண்டும்.

15. கடன் பெற்றவர்களின் வீடுகளில் துக்க நிகழ்வு அல்லது திருமண நிகழ்வு நடக்கும் போது, ஏஜென்ட்டுகள் கடன் பெற்றவர்களை அணுகக் கூடாது.

அன்று கட்சிக்குள் வெடித்த பூகம்பம்; டெல்லி நெருக்கம்! - உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனின் பின்னணி

தமிழக வெற்றி கழகத்தின் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்று இருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கபட்டிருக்கிறது. குறிப்பாக மேலூர் பொதுத் தொக... மேலும் பார்க்க

தேனி: அரசு மருத்துவமனை வார்டுகளில் சுற்றித் திரியும் எலிகள்; நோயாளிகள் அச்சம்!

தேனி மாவட்டம், கானா விலக்கில், அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தேனி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கேரளம் மாநிலத்தில் இருந்தும் நாள்தோறும்... மேலும் பார்க்க

தவெக அமைச்சரவையில் இடம்பெறும் திருமாவளவன்? திருச்சி கிழக்கில் இடைத் தேர்தலில் போட்டியா?

த.வெ.க அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்புவிடுத்த நிலையில், வி.சி.க சார்பில் அதன் தலைவர் திருமாவளவனே அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்கிறார்கள... மேலும் பார்க்க

ஆந்திரா: `நீண்டகாலத் திட்டமிடல் இல்லாமல் வெறுமனே...' - விவாதத்துக்குள்ளாகும் அரசின் திட்டம்!

மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டபோது, தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால், பெரும் சிக்கலுக்கு உள்ளாகின. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த த... மேலும் பார்க்க

மதுரை : 'ஆதார் அட்டையைக் காண்பித்து மது வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்' – காரணம் என்ன?

தமிழ்நாட்டில் கோயில்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும், மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: ``தமிழ்நாடு அரசு, மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவா?" - அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்களை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி கல்வி நிதியை நிறுத்தி... மேலும் பார்க்க