செய்திகள் :

Parimala & Co: "மிஷ்கின் சார் எல்லாத்தையும் குறை சொல்ற கேரக்டர்!" - இயக்குநர் பாண்டிராஜ் கலகல

post image

'தலைவன் தலைவி' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் 'பரிமளா & கோ' திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. ஜெயராம், ஊர்வசி, 'லப்பர் பந்து' சஞ்சனா, அனந்திகா, மிஷ்கின், சாண்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் தொடர்பாக பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

‘பரிமளா & கோ' படத்தில்...
‘பரிமளா & கோ' படத்தில்...

மேடையில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், "'தலைவன் தலைவி' ரிலீஸுக்குப் பிறகு பெரிய ஹீரோக்கள் படம் எல்லாம் வந்தது, எல்லாருமே ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. பிறகு நான் ஜெயராம் சாருக்கும், ஊர்வசி அம்மாவுக்கும் கதை சொன்னேன். ரெண்டு பேருமே அவ்வளவு ரசிச்சாங்க.

ஊர்வசி அம்மா சிரித்துக்கொண்டே கதை கேட்டாங்க. எனக்கு அங்கு ஒரு நம்பிக்கை வந்தது. ஜெயராம் சாரும் கதையைக் கேட்டுட்டு, 'சார், சூப்பரா இருக்கு சார். இது வந்து கண்டிப்பா ஹிட் ஆகும் சார்'னு சொன்னார்.

ஒரு ரெண்டு லெஜண்ட்ஸ் வந்து இதைச் சொல்லும்போது, எனக்கும் நம்பிக்கை கிடைச்சது. அப்புறமா மிஷ்கின் சாருக்குக் கதை சொன்னேன். அவர், 'ஏய், நல்லா இருக்குடா. அதை பண்ணலாம்டா. கமர்ஷியலா சூப்பரா இருக்குடா. நான் பண்றேன்'னு சொல்லிட்டாரு.

ஏன்னா, மிஷ்கின் சார் எல்லாத்தையுமே நொட்டை சொல்கிற கேரக்டர். அவர் இதை ஓகே சொல்லும்போது எனக்கும் நம்பிக்கை வந்தது. ஊர்வசி அம்மாவை நாங்க 'அம்மா அம்மா'ன்னுதான் கூப்பிடுவோம்.

உண்மையிலேயே நீங்க எங்களை கஷ்டப்படுத்தல, நாங்கதான் உங்களை கஷ்டப்படுத்தியிருக்கோம். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி. இந்தப் படத்துக்குப் பாலக்காட்டுல சூட்டிங் செய்திட்டு இருந்தோம்.

‘பரிமளா & கோ' படத்தில்...
‘பரிமளா & கோ' படத்தில்...

அங்கப் போன முதல் நாளே, ஊர்வசி அம்மாவுடைய அண்ணன் இறந்துவிட்டதாக போன் வந்தது. எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியல. படத்துக்காக பெரிய செட் அங்க போட்டுட்டோம். அப்போ ஊர்வசி அம்மா, 'பாண்டி, நீ கவலைப்படாத, நீங்க கேன்சல் பண்ண வேண்டாம்.

நான் போயிட்டு மறுநாளே வந்துடுறேன்'னு சொல்லி மறுநாளே படப்பிடிப்புக்கு வந்தாங்க. அதுல பெரிய சவால் என்னன்னா, பயங்கர காமெடியான சீன்ல நடிக்கணும். அது ரொம்ப கஷ்டம். ஒரு சோகத்துல இருக்கிற இவங்களால எப்படி காமெடியா பண்ண முடியும்னு யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா, அந்த சீன்ல பிரிச்சிட்டாங்க!" என்றார்.

Karuppu: "சென்சார்னால அந்த வசனம் மாறுச்சு; ஆனாலும் க்ளாப்ஸ்!" - 'புதுகை பூபாளம்' பிரகதீஸ்வரன் பேட்டி

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பால், திரைப்படத்... மேலும் பார்க்க

கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுக்கும், நடிகை ஸ்ரீலீலாவுக்கும் காதலா? - ஸ்ரீலீலாவின் தாய் சொல்வதென்ன?

நடிகை ஸ்ரீலீலா தற்போது, பாலிவுட்டில் அனுராக் பாசு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதுபோல இங்கு கோலிவுட்டில் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷை வைத்து இயக்கும் 'D55' படத்திலும் நடிக்கக் கமிட்டாகியிருக்கி... மேலும் பார்க்க

Blast: "எனக்குள் இருந்த பயத்தை போக்கிய அர்ஜுன் சாருக்கு நன்றி" - 'ஆக்ஷன் அவதாரம்' குறித்து அபிராமி

சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `பிளாஸ்ட்'. கராத்தேவை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள ந... மேலும் பார்க்க

'25 வருடத்திற்குப் பின் அபிராமியுடன் நடித்திருக்கிறேன், முதன்முதலில் அவரை சந்தித்தபோது.!'- அர்ஜுன்

சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `ப்ளாஸ்ட்'. இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (மே.1... மேலும் பார்க்க

Karuppu: "இளையராஜாவைக் காயப்படுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை" - படக்குழு வருத்தம்; பின்னணி என்ன?

சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' படத்திற்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ஆகியோர் முக்கியக் கதாபா... மேலும் பார்க்க