செய்திகள் :

TVK: 'கமலி எனும் நான்'... பட்டதாரி; 28 வயதான இல்லத்தரசி இனி அமைச்சர் - யார் இந்த கமலி?

post image

திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் பா.ஜ.க - வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகனை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார் த‌.வெ.க வேட்பாளர் கமலி.

தி.மு.க- வின் இளம் வேட்பாளரான மருத்துவர் கோகிலா மணிக்கும் எல். முருகனுக்கும் தான் போட்டி என கணிக்கப்பட்ட நிலையில், அனைத்தையும் தவிடு பொடியாக்கி வெற்றியை தனதாக்கிக் கொண்டார் கமலி. அவிநாசி தனி தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலி இன்றைக்கு தமிழ்நாட்டின் அமைச்சராக மகுடம் சூட இருக்கிறார்.

கமலி

யார் இந்த கமலி?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த கமலி பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 28 வயதே ஆன இல்லத்தரசியான இவரின் கணவர் இ- சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.‌

முதுகலை பட்டதாரியான இவருக்கு ஏற்பட்ட அரசியல் ஆர்வம் காரணமாக த.வெ.க- வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவிநாசி (தனி ) தொகுதியில் த‌.வெ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வாகை சூடினார். ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசனின் அமைச்சரவையில் இடம் பெற்று கவனத்தை ஈர்த்து வருகிறார்.!

கோவையில் தவெக-வின் முதல் வெற்றியை பதிவு செய்த ரசிகர் மன்ற நிர்வாகி - அமைச்சரான விக்னேஷ் பின்னணி!

கோவை கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விக்னேஷ் பதவி வகித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை இறுதியில் 99 ஆயிரத்து 950 வாக்குகள் பெற்ற விக்னேஷ், 11 ஆயிரத்து 710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெ... மேலும் பார்க்க

கேலிச்சித்திரச் சர்ச்சை: மாறிவரும் உலக ஒழுங்கும், மேற்கத்திய நாடுகளிடம் மாறாத இந்திய பிம்பமும்!

நார்வே பயணமும் - கார்ட்டூனும்!மேற்கத்திய ஊடகங்களில் இந்தியாவைக் குறித்த ஸ்டீரியோடைப் மற்றும் இனவெறிச் சித்தரிப்புகள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன. அந்த வகையில், இந்தியப் பிரதமர் மோடியின் நார்வ... மேலும் பார்க்க

'விஜய்யின் அமைச்சரவையில் 7 தலித் எம்.எல்.ஏக்களுக்கு இடம்!' - முழு விவரம்!

தமிழக அரசு சார்பில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 23 அமைச்சர்களும் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்கின்றனர். இந்நிலையில், தவெக அரசு சார்பில் உருவாக்கப்பட... மேலும் பார்க்க

'முதல்முறையாக' ஈரான், அமெரிக்கா பறக்கவிடும் 'வெள்ளைக் கொடி' - என்ன சொல்கிறார்கள்?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவும், ஈரானும் ஒன்றாக 'ஈரான் போர் நிறுத்தத்திற்கு' பாசிட்டிவ் சிக்னலை தெரிவித்துள்ளது. ட்ரம்ப் பேச்சுநேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,... மேலும் பார்க்க

'தூத்துக்குடி ஶ்ரீநாத், அவினாசி கமலி' அமைச்சர் விரிவாக்க பட்டியலில் யார் யார்? காங்கிரஸுக்கு இடம்!

தமிழ்நாடு அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு முதலமைச்சர் விஜயோடு 10 அமைச்சர்கள் இருந்த நிலையில், தற்போது 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாருக்கும் இலாகா இன்னும் அ... மேலும் பார்க்க

TVK: இன்று அமைச்சரவை விரிவாக்கம்; காங்கிரஸிற்கு 2, விசிகவிற்கு 1 அமைச்சர்? | Tamilnadu News Live

தமிழ்நாட்டில் அமைச்சரவை விரிவாக்கம்!தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சரோடு சேர்த்து 10 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இன்று இந்த அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மொத்தம் 2... மேலும் பார்க்க