செய்திகள் :

கோவையில் தவெக-வின் முதல் வெற்றியை பதிவு செய்த ரசிகர் மன்ற நிர்வாகி - அமைச்சரான விக்னேஷ் பின்னணி!

post image

கோவை கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விக்னேஷ் பதவி வகித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை இறுதியில் 99 ஆயிரத்து 950 வாக்குகள் பெற்ற விக்னேஷ், 11 ஆயிரத்து 710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் கோவையில் த.வெ.க. தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக அத்தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.வி.கே. கந்தசாமியின் பேரன் சபரி கார்த்திகேயன் மற்றும் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் ஆகியோரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க. பலம் வாய்ந்த இந்த தொகுதியில் அக்கட்சியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதுமுகமான விக்னேஷ் சட்டமன்றத்திற்கு தேர்வானார்.

விக்னேஷ்
விக்னேஷ்

கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள மச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (38). பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வருகிறார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் மன்றத்தில் பணியாற்றி வந்த இவர், த.வெ.க-வில் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட த.வெ.க. அமைச்சரவையில், முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள விக்னேஷ்க்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சராக பதவியேற்ற விக்னேஷ்க்கு விரைவில் துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல மாநகர மாவட்டச் செயலாளர் சம்பத்குமாருக்கும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால், கோவை மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நெய் வியாபாரம்; 20 ஆண்டு ரசிகர் மன்ற நிர்வாகி டு அமைச்சர் – யார் இந்த கோவை சம்பத் குமார்?

கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சம்பத் குமார் பதவி வகித்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட அவர், 92 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்று, 21 ஆயிரத்து 992 வாக... மேலும் பார்க்க

தவெக அமைச்சரவை: சென்னைக்கு 6, நாமக்கலுக்கு 3, கோவைக்கு.? - மாவட்ட வாரியாக அமைச்சர்கள் விவரம்

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளைவிட கூடுதல் தொகுதிகளை வென்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் தவெக தலைவர் விஜய். கடந்த 10-ம் தேதி பதவிப்பிரமாணம் ... மேலும் பார்க்க

கேலிச்சித்திரச் சர்ச்சை: மாறிவரும் உலக ஒழுங்கும், மேற்கத்திய நாடுகளிடம் மாறாத இந்திய பிம்பமும்!

நார்வே பயணமும் - கார்ட்டூனும்!மேற்கத்திய ஊடகங்களில் இந்தியாவைக் குறித்த ஸ்டீரியோடைப் மற்றும் இனவெறிச் சித்தரிப்புகள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன. அந்த வகையில், இந்தியப் பிரதமர் மோடியின் நார்வ... மேலும் பார்க்க

TVK: 'கமலி எனும் நான்'... பட்டதாரி; 28 வயதான இல்லத்தரசி இனி அமைச்சர் - யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் பா.ஜ.க - வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகனை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார் த‌.வெ.க வேட்பாளர் கமலி. தி.மு.க- வின் இளம் வேட்பாளரான மருத்துவர் கோகிலா ... மேலும் பார்க்க

'விஜய்யின் அமைச்சரவையில் 7 தலித் எம்.எல்.ஏக்களுக்கு இடம்!' - முழு விவரம்!

தமிழக அரசு சார்பில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 23 அமைச்சர்களும் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்கின்றனர். இந்நிலையில், தவெக அரசு சார்பில் உருவாக்கப்பட... மேலும் பார்க்க

'முதல்முறையாக' ஈரான், அமெரிக்கா பறக்கவிடும் 'வெள்ளைக் கொடி' - என்ன சொல்கிறார்கள்?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவும், ஈரானும் ஒன்றாக 'ஈரான் போர் நிறுத்தத்திற்கு' பாசிட்டிவ் சிக்னலை தெரிவித்துள்ளது. ட்ரம்ப் பேச்சுநேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,... மேலும் பார்க்க