செய்திகள் :

தவெக அமைச்சரவை: சென்னைக்கு 6, நாமக்கலுக்கு 3, கோவைக்கு.? - மாவட்ட வாரியாக அமைச்சர்கள் விவரம்

post image

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளைவிட கூடுதல் தொகுதிகளை வென்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் தவெக தலைவர் விஜய். கடந்த 10-ம் தேதி பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்ட நிலையில், அவருடன் 9 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், மொத்தம் 32 அமைச்சர்களின் விவரங்களும், அவர்கள் சார்ந்த தொகுதிகளின் அடிப்படையிலும் மாவட்ட வாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு
அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு

சென்னையில் 6 அமைச்சர்கள், நாமக்கல் மாவட்டத்துக்கு 3 அமைச்சர்கள், காஞ்சிபுரம், ஈரோடு, கோவை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 அமைச்சர்கள். சேலம், செங்கல்பட்டு, கடலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 அமைச்சர் பதவி வீதம் வழங்கப்பட்டிருக்கிறது.

19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை

தமிழக அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை.

தவெக வெற்றி பெறாத குமரி மாவட்டத்தில் மட்டும் காங்கிரசிற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது

மாவட்டத்தின் பெயர்அமைச்சர்களின் எண்ணிக்கை

சென்னை (6 அமைச்சர்கள்)

N. மரிய வில்சன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்)

N. ஆனந்த் (தியாகராய நகர்)

ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்)

P. வெங்கடராமன் (மயிலாப்பூர்)

ராஜ்மோகன் (எழும்பூர்)

R.குமார் (வேளச்சேரி)

நாமக்கல் (3 அமைச்சர்கள்)

C. விஜயலட்சுமி (குமாரபாளையம்)

D. லோகேஷ் தமிழ்செல்வன் (ராசிபுரம்)

டாக்டர் K. G. அருண்ராஜ் (திருச்செங்கோடு)

மரிய வில்சன்
மரிய வில்சன்

காஞ்சிபுரம் (2 அமைச்சர்கள்)

R.V. ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்)

K. தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)

ஈரோடு (2 அமைச்சர்கள்)

M. விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)

K. A. செங்கோட்டையன் (கோபிசெட்டிபாளையம்)

கோயம்புத்தூர் (2 அமைச்சர்கள்)

V. சம்பத் குமார் (கோயம்புத்தூர் வடக்கு)

k. விக்னேஷ் (கிணத்துக்கடவு)

மதுரை (2 அமைச்சர்கள்)

P. விஸ்வநாதன் (காங்கிரஸ் - மேலூர்)

R. நிர்மல்குமார் (திருப்பரங்குன்றம்)

தூத்துக்குடி (2 அமைச்சர்கள்)

ஸ்ரீநாத் (தூத்துக்குடி)

P. மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்)

விருதுநகர் (2 அமைச்சர்கள்)

K. ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)

S. கீர்த்தனா (சிவகாசி)

அமைச்சர் ஸ்ரீநாத் (தூத்துக்குடி)
அமைச்சர் ஸ்ரீநாத் (தூத்துக்குடி)

சேலம்

A. தமிழன் பார்த்திபன். (சேலம் தெற்கு )

செங்கல்பட்டு

D. சரத்குமார் (தாம்பரம்)

கடலூர்

B. ராஜ்குமார் (கடலூர்)

கன்னியாகுமரி

S. ராஜேஷ் குமார் (காங்கிரஸ் - கிள்ளியூர்)

புதுக்கோட்டை

J. முகமது ஃபர்வாஸ் (அறந்தாங்கி)

இராமநாதபுரம்

ராஜீவ் (திருவாடானை)

இராணிப்பேட்டை

V. காந்திராஜ் (அரக்கோணம்)

அமைச்சர் டாக்டர் பிரபு காரைக்குடி
அமைச்சர் டாக்டர் பிரபு காரைக்குடி

சிவகங்கை

டாக்டர் T. K. பிரபு (காரைக்குடி)

தஞ்சாவூர்

வினோத் (கும்பகோணம்)

திருச்சிராப்பள்ளி

விஜய் (ஸ்ரீரங்கம்)

திருப்பூர்

கமலி. S (அவினாசி)

த.வெ.க வெற்றி பெறாத கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரசிற்கு மட்டும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க வலுவான வாக்கு வங்கியை கொண்டிருக்கும் கொங்கு மண்டலத்திற்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்து அமைச்சரவைப் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடதக்கது.

நெய் வியாபாரம்; 20 ஆண்டு ரசிகர் மன்ற நிர்வாகி டு அமைச்சர் – யார் இந்த கோவை சம்பத் குமார்?

கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சம்பத் குமார் பதவி வகித்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட அவர், 92 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்று, 21 ஆயிரத்து 992 வாக... மேலும் பார்க்க

கோவையில் தவெக-வின் முதல் வெற்றியை பதிவு செய்த ரசிகர் மன்ற நிர்வாகி - அமைச்சரான விக்னேஷ் பின்னணி!

கோவை கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விக்னேஷ் பதவி வகித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை இறுதியில் 99 ஆயிரத்து 950 வாக்குகள் பெற்ற விக்னேஷ், 11 ஆயிரத்து 710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெ... மேலும் பார்க்க

கேலிச்சித்திரச் சர்ச்சை: மாறிவரும் உலக ஒழுங்கும், மேற்கத்திய நாடுகளிடம் மாறாத இந்திய பிம்பமும்!

நார்வே பயணமும் - கார்ட்டூனும்!மேற்கத்திய ஊடகங்களில் இந்தியாவைக் குறித்த ஸ்டீரியோடைப் மற்றும் இனவெறிச் சித்தரிப்புகள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன. அந்த வகையில், இந்தியப் பிரதமர் மோடியின் நார்வ... மேலும் பார்க்க

TVK: 'கமலி எனும் நான்'... பட்டதாரி; 28 வயதான இல்லத்தரசி இனி அமைச்சர் - யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் பா.ஜ.க - வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகனை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார் த‌.வெ.க வேட்பாளர் கமலி. தி.மு.க- வின் இளம் வேட்பாளரான மருத்துவர் கோகிலா ... மேலும் பார்க்க

'விஜய்யின் அமைச்சரவையில் 7 தலித் எம்.எல்.ஏக்களுக்கு இடம்!' - முழு விவரம்!

தமிழக அரசு சார்பில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 23 அமைச்சர்களும் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்கின்றனர். இந்நிலையில், தவெக அரசு சார்பில் உருவாக்கப்பட... மேலும் பார்க்க

'முதல்முறையாக' ஈரான், அமெரிக்கா பறக்கவிடும் 'வெள்ளைக் கொடி' - என்ன சொல்கிறார்கள்?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவும், ஈரானும் ஒன்றாக 'ஈரான் போர் நிறுத்தத்திற்கு' பாசிட்டிவ் சிக்னலை தெரிவித்துள்ளது. ட்ரம்ப் பேச்சுநேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,... மேலும் பார்க்க