செய்திகள் :

ராஜேஷ்குமார்: ஆட்சியில் பங்கு என முதல் குரல் கொடுத்த காங்கிரஸ்காரர்; மாணவர் பேரவை தலைவர் டு அமைச்சர்

post image

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக 3-வது முறையாக வென்ற ராஜேஷ்குமார் இப்போது த.வெ.க கூட்டணி ஆட்சியில் அமைச்சராகவுள்ளார்.

கல்லூரி படித்தபோதே அனைத்து கல்லூரி மாணவர் பேரவை தலைவராக இருந்தார் ராஜேஷ்குமார். பின்னர் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த சமயத்தில் மக்கள் பிரச்னைக்காகப் போராட்டங்கள் நடத்தியதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பிரபலம் ஆனார்.

அவரை இளைஞர் கூட்டம் பின் தொடர்ந்தது. அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்த ராஜேஷ்குமார் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து கட்சியை வலுப்படுத்தினார்.

கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஜான் ஜேக்கப் தீவிர ஜி.கே.வாசன் ஆதரவாளர். எனவே, ஜி.கே.வாசன் த.மா.க தொடங்கியதும் ஜான் ஜேக்கபும் அவருடன் சென்றார். அதைத்தொடர்ந்து கடந்த 2016 சட்டசபை தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு ராஜேஷ்குமாருக்குக் கிடைத்தது.

கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் கோட்டை என்பதாலும், களத்தில் நன்கு அறிமுகம் ஆனவர் என்பதாலும் ராஜேஷ்குமார் வெற்றிபெற்றார். 2021 தேர்தலில் இரண்டாவதுமுறை வென்றவர் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக ஆனார். இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டு, த.வெ.க அலையில் சிக்காமல் வென்று எம்.எல்.ஏ ஆனார்.

பின்னர் த.வெ.க கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தது. காங்கிரஸில் வென்ற 5 எம்.எல்.ஏ-க்களில் சீனியர் என்பதால் மீண்டும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ஆக்கப்பட்டார்.

மேலும், த.வெ.க கூட்டணியில் காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதும் ராஜேஷ்குமார் பெயரே மேலோங்கி நின்றது.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ

இன்று ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதிக சீட்டுகள் வேண்டும் எனவும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனவும் முதலில் குரல்கொடுத்தவர் ராஜேஷ்குமார்.

அந்தக் கருத்தில் உறுதியாகவும் இருந்தார். தேர்தலுக்கு முன்பு ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசிய ராஜேஷ்குமார், "அதிகமான தொகுதி வேண்டும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஆட்சி வேண்டும் என்று கேட்டேன். ஆட்சியில் பங்கு வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் கேட்கிறோம்.

எங்கள் தலைமை நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். அமைச்சரவையில் காங்கிரஸ் அங்கம் வகித்தால்தான் கூட்டணி சார்பில் கொடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்களாலும் முடியும்" என்றார்.

அமைச்சர் ஆகும் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார் விரும்பியது போன்று 59 ஆண்டுகளுக்குப்பின் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காலம் பிறந்திருக்கிறது எனத் தொண்டர்கள் உற்சாகமாகக் கூறுகின்றனர்.

கடந்த தி.மு.க ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் வென்ற மனோ தங்கராஜ் அமைச்சர் ஆனார். மனோதங்கராஜின் வீடு மற்றும் வாக்குரிமை ஆகியவை கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கருங்கல் பகுதியில் உள்ளன. அவர் அமைச்சராக இருந்த சமயத்தில் கருங்கலை அடுத்த பாலூரில் உள்ள அவரது வீடு முகாம் அலுவலகமாகச் செயல்பட்டது.

அதுபோன்று ராஜேஷ்குமாரின் வீடும் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கருங்கல் பகுதியாகும். எனவே கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி யோகம் அடித்திருக்கிறது.

TVK: இன்று அமைச்சரவை விரிவாக்கம்; காங்கிரஸிற்கு 2, விசிகவிற்கு 1 அமைச்சர்? | Tamilnadu News Live

தமிழ்நாட்டில் அமைச்சரவை விரிவாக்கம்!தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சரோடு சேர்த்து 10 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இன்று இந்த அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மொத்தம் 2... மேலும் பார்க்க

'ரஹ்மான் கலி' டு 'ராம் கலி' : 80 ஆண்டுகளுக்குப் பின் பழைய பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அரசு தன் நாட்டின் பழமையை பாதுகாக்கும் வகையில் தன் நாட்டின் பல்வேறு நகரங்களின் பெயரை மாற்றி வருகிறது. அதன் அடிப்படையில் பிரிவினைக்கு முந்தைய தங்களின் பழைய இந்து, சீக்கிய, சமண மற்றும் காலனித்... மேலும் பார்க்க

`மருத்துவமனைக்கு வெள்ளை கோட்டுடன் சென்றதற்கு காரணம் இதுதான்!' - தவெக நிர்வாகி வாசுதேவி விளக்கம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி தனியார் குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி நிர்மல் (29) என்பவரின் கை இயந்திரத்தில் சிக்கித் துண்டானது. அதை... மேலும் பார்க்க

59 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்; `அந்த' 2 எம்.எல்.ஏ-க்கள் யார்?!

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாகப் பங்கேற்கிறது. நாளை (வியாழக்கிழமை) நடைபெறவ... மேலும் பார்க்க

`விசிக... காங்கிரஸ்... ஐ.யு.எம்.எல்' - விஜய் போடும் கணக்கு; அமைச்சரவை பட்டியல் தயார்!

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசில் கூட்டணியாக இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள், வி.சி.கவு-வுக்கு ஓர் இடம் என அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து த.... மேலும் பார்க்க