செய்திகள் :

"அது என்னை காலி பண்றதுக்காக பண்ணின விஷயம்!" - 'நந்தினி' ராகுல் ரவி ஷேரிங்ஸ்

post image

'நந்தினி' சீரியல் மூலம் நமக்கு பரிச்சயமான நடிகர் ராகுல் ரவி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'மருமகள்' சீரியலில் நடித்து வருகிறார்.

Marumagal Serial
Marumagal Serial

அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசியவர், "'மருமகள்' சீரியல் மக்களுக்குப் பிடிச்சதுல ரொம்பவே மகிழ்ச்சி. இத்தனை நாள்களாக மக்களோட ஆதரவுடன் நல்லபடியாக சீரியல் போயிட்டிருக்கு. இந்தக் கேரக்டருக்கு என்னுடைய உடல்மொழியில இருந்து நிறைய விஷயங்களை மாத்திக்க வேண்டியதாக இருந்தது.

அப்படியான உழைப்புக்கு அங்கீகாரமும் கிடைக்குது. இந்த சீரியல் தொடங்கி 2 வருஷத்துக்கு மேல ஆகுது. மக்களுக்கு எங்களுடைய கதாபாத்திரமும் நல்லாவே பரிச்சயம் ஆகியிருக்கு. நான் ரொம்பவே இன்ட்ரோவெர்ட் பையன். அதுனால, எனக்குப் பெரியளவுல ஃபிரண்ட்ஸ் இருக்கமாட்டாங்க.

ஆனா, இந்த சீரியல் மூலமாக கேப்ரில்லா, சந்தோஷ்னு இரண்டு நண்பர்கள் எனக்குக் கிடைச்சிருக்காங்க." என்றவர், "இப்போ நான் எத்தனை சீரியல் பண்ணினாலும், பலரும் இப்போ என்கிட்ட 'நந்தினி' சீரியல் பத்திதான் பேசுவாங்க. இப்போவும் அந்த சீரியலுக்கான ஃபேன்ஸ் இருக்காங்க.

Rahul Ravi - Marumagal Serial
Rahul Ravi - Marumagal Serial

இப்போ அந்த சீரியலை ரீடெலிகாஸ்ட் செய்திட்டிருக்காங்க. அதனால, அந்த வைப்ரேஷன் இருந்துட்டே இருக்கு. அந்த சீரியலுக்குப் பிறகு அடுத்தடுத்து சன் டிவியில சீரியல் நடிச்சிட்டு இருக்கேன். என்னுடைய சொந்த ஊரான கேரளாவுக்குக்கூடப் போறது இல்ல.

முதல் பேன் இந்தியன் சீரியல் அது. இப்படிச் சொல்லிகிட்டே போகிற அளவுக்கு அந்த சீரியல்ல நிறைய மெமரிஸ் இருக்கு. அதுமட்டுமல்ல, விஜயகுமார் சார் மாதிரியான சீனியர் நடிகர்களோட சேர்ந்து நடிச்சது நல்ல அனுபவமாக இருந்துச்சு.

ஆனா, அவர் ரொம்பவே எளிமையான நபர். சொல்லப்போனால், அந்த சீரியல் டைம்ல நான்தான் விஜயகுமார் சாருடைய ஒரிஜினல் பையன் அருண் விஜய்னு நினைச்சுட்டாங்க." என்றார்.

பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' படத்தில் ராகுல், ஸ்ரீலீலாவின் காதலனாக நடித்திருப்பார். அது குறித்து அவர், "'பகவந்த் கேசரி' திரைப்படத்துல என்னுடைய கேரக்டர் கொஞ்சம் நேரம்தான் வரும்.

அந்தத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்தான் 'ஜனநாயகன்'னு சொல்லும்போது ரொம்பவே சந்தோஷப்பட்டேன். தெலுங்குல நான் பண்ணின கேரக்டர் இதுலையும் இருக்குனு கேள்விப்பட்டேன்.

'பகவந்த் கேசரி' மாதிரி 'ஜனநாயகன்' படத்துக்கும் என்னை நடிக்கக் கூப்பிடுவாங்கனு நினைச்சேன். ஆனா, அது நடக்காமல் போயிடுச்சு." என்றார்.

Rahul Ravi - Marumagal Serial
Rahul Ravi - Marumagal Serial

தொடர்ந்து பேசியவர், "நான் மலையாளத்துல 'பொன்னம்பிளி'னு ஒரு சீரியல் பண்ணியிருந்தேன். அதுதான் என்னுடைய முதல் சீரியல்.

அது ஒரு ட்ரெண்ட்செட்டராகவும் இருந்துச்சு. அந்த சீரியல் மாதிரியான கான்செப்ட் கொண்ட சீரியல்கள் எதுவும் வந்தது கிடையாது.

அதனால அந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. பிறகு, தமிழ்ல நான் 'நந்தினி' சீரியல்ல நடிக்கும்போது, மலையாள ஆடியன்ஸ் அந்த சீரியலையும் பார்த்தாங்க. எனக்காகத் தமிழ், மலையாளம்னு இரண்டு மொழிகளிலும் சீரியல் பார்க்கிற ஆட்கள் இருக்கிறாங்க.

அதை நல்ல விஷயமாகப் பார்க்கிறேன்." என்றவர், அவருடைய பர்சனல் வாழ்க்கையில் நிகழ்ந்த அவருடைய கடின காலங்கள் குறித்து, "என்னை காலி பண்றதுக்காக ஒரு டீம் பண்ணின ஒரு விஷயம் நடந்தது.

Rahul Ravi - Marumagal Serial
Rahul Ravi - Marumagal Serial

அதான் அது, அதைப்பத்தி நான் பேச விரும்பல. அது ஏன் பண்றாங்கன்றது நிறைய விஷயங்கள் இருக்கு. அந்த நேரத்துல அந்தப் பிரச்னைகளுக்குப் பின்னாடி போய் ஸ்ட்ரெஸ் எடுக்கிறதைவிட, உண்மை எல்லோருக்கும் தெரிய வரும்னு அமைதியாக இருந்தேன்.

நான் என்னுடைய தரப்பு விளக்கத்தைக் கொடுக்கணும்னா, நிறைய கொடுத்துட்டே இருக்க வேண்டியதுதான். எதுக்கு என்னுடைய எனர்ஜியை அதுல வேஸ்ட் பண்ணனும். அமைதியாக இருந்தாலே எல்லாம் சரியாகிடும்." எனப் பேசினார்.

முழுப் பேட்டியை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

`ஒருவழியா குடியிருக்க ஒரு வீடு தந்துட்டாங்க; விகடனுக்கு பெரிய நன்றி!'- நடிகர் ராஜசேகர் மனைவி தாரா

வங்கிக் கடன் கட்ட முடியாத நிலையில் தன்னுடைய வீடு ஏலத்தில் போனதையடுத்து, தனக்கு குடியிருக்க ஒரு வீடு ஒதுக்கித் தர வேண்டுமென மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்ததை அ... மேலும் பார்க்க

`நல்ல சம்பளம், சின்னதா ஒரு பிசினஸ்... அதான் துபாய்லயே செட்டில் ஆகிட்டேன்!' - 'மை டியர் பூதம்' கௌதம்

சன் டிவியில் ஒளிபரப்பான 'மை டியர் பூதம்' நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா?வியட்நாம் வீடு சுந்தரம், வையாபுரி, சங்கீதா பாலன், ராஜ்கமல் - லதாராவ், டி பி கஜேந்திரன் என சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் ஒருபுறமும், மாஸ்டர் ... மேலும் பார்க்க

'காலையில் பாஜக-வுக்கு, மாலையில் திமுக-வுக்கு' - டிவி பிரபலங்கள் செய்த‌ பிரசாரம்

'உங்கிட்ட வாங்கின காசுக்கு தென்னமரத்துல ஒரு குத்து, அந்தாளு கிட்ட வாங்கின காசுக்கு ஏணிச் சின்னத்துல ஒரு குத்து' என நடிகர் முத்துக்காளை வடிவேலுவிடம் சொல்லும் நகைச்சுவை காட்சி ரொம்பவே பிரபலம்.நடந்து முட... மேலும் பார்க்க

`ரொம்ப அடாவடி பண்ணினாங்க'- அனு; அக்ரிமென்ட்ல தெளிவா இருக்கு - விஜய் 'ரெசார்ட்' வெப்சீரிஸ் பஞ்சாயத்து

யூ டியூபர் எருமசாணி விஜய் எழுதி நடிக்க ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் 'ரெசார்ட்' வெப் சீரிஸில் லீட் ரோலில் நடிக்க கமிட் செய்து விட்டு ஷூட்டிங்கிற்கே அழைக்கவில்லை' என கேரளாவைச் சேர்ந்த நடிகை அனுக... மேலும் பார்க்க