செய்திகள் :

திடீர் ஆய்வுகள்: ``தவெக உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?" - டிடிவி தினகரன் கேள்வி!

post image

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய அரசின் செயல்பாடுகள் மற்றும் ஆளுங்கட்சியினரின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளும் அரசியல் தலைவர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், தவெக-வினர் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 'ஆய்வு' என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அமுமுக தலைவர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் - மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்" என்று சூளுரைத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? மேலும் திரு ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது. எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான திரு ஜோசப் விஜய் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜார்ஜியா மெலோனி: "நீ ரொம்ப குண்டா இருக்க" - அரசியலுக்கு வித்திட்ட அந்த சம்பவம் - சுவாரசிய தகவல்கள்!

இத்தாலியின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர் ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni). 2022-ம் ஆண்டு இத்தாலியின் பிரதமராகப் பதவியேற்ற இவரது வாழ்க்கை, பல சவால்களும், போராட்டங்களும், சுவார... மேலும் பார்க்க

`தோல்வியடைந்த தேர்தல்களுக்குப் பிறகுதான் பந்துபோல திமுக Bounce Back ஆகும்!' - ஸ்டாலின்

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ``நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் ... மேலும் பார்க்க

"ரிசைன் பண்ணிட்டு வரட்டும் பார்க்கலாம்..." - அ.தி.மு.க-வினருக்கு முதல்வர் வைத்த ட்விஸ்ட்!

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டு, வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ் தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க பொதுச்செயலா... மேலும் பார்க்க

'தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் யார் யாருக்கு இடம்?' - ரேஸில் இருப்போர் யார்?

தவெக அரசு பொறுப்பேற்ற போது முதல்வர் விஜய்யோடு 9 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தவெக முகாமில் கி... மேலும் பார்க்க

`முதல்வர் அறையில் ரீல்ஸ்; விஜய் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்!' - தமிழிசை சௌந்தரராஜன்

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், ``தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் மற்றும் தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித... மேலும் பார்க்க