செய்திகள் :

வருமான வரிக் கணக்குத் தாக்கலை ஜூலை ஸ்ட்ராட்டிங்ல பண்ணீடாதீங்க; எப்போ பண்ணனும்? | பணம் வளர்ப்போம்

post image

'சரி... வருமான வரிக் கணக்குத் தாக்கலை எல்லாம் சரியாகச் செய்துவிடுகிறோம்... ஆனால், எப்போது செய்வது நல்லது' என்று கேட்கிறீர்களா? அதற்கான பதிலைத் தருகிறார் ஆடிட்டர் கிரி பாபு.

"ஒவ்வோர் ஆண்டும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31. உங்கள் நிறுவனம் உங்களுக்கு ஃபார்ம் 130-ஐ ஜூன் மாதத்தின் பாதியில் கொடுத்துவிடும்.

ஆனால், ஃபார்ம் 168 (முன்னால் 26AS, AIS)வர தாமதமாகும்.

அதனால், வருமான வரிக் கணக்குத் தாக்கலை சீக்கிரம் செய்யக் கூடாது.

ஆடிட்டர் கிரி பாபு
ஆடிட்டர் கிரி பாபு

ஃபார்ம் 168 (முன்னால் 26AS, AIS) வருவதற்கு முன், தாக்கல் செய்தால், ஏதேனும் ஒரு தகவலை மிஸ் செய்யக்கூடும். இந்தச் சின்ன தவறினால், நம் வீட்டிற்கு வருமான வரி நோட்டீஸ் தேடி வரலாம்.

அதனால், அதைத் தவிர்ப்பது மிக மிக முக்கியம்.

'சீக்கிரம் தானே செய்யக் கூடாது... லேட்டா செய்யலாம்ல' என்கிற கேள்வி இருக்கிறதா? கடைசி நேரத்தில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தால், வெப்சைட் டவுன் போன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

சில நேரங்களில், இதனால், வருமான வரிக் கணக்குத் தாக்கலை செய்யாமல்கூட போய்விட நேரிடும். இதனால், ஜூலை 11 - 25-க்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுவது நல்லது".

இரண்டு சம்பளம் வாங்கும் கணவன்-மனைவியா? 45 வயதில் ரிட்டைர்மென்ட் பெறுவது எப்படி?

இரண்டு சம்பளம், கேட்கவே நல்லா இருக்குல்ல! 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலும் இந்தியக் குடும்பங்களில் கணவர் மட்டுமே வேலைக்குச் செல்வார். மனைவி வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்வார். இன்று பெண்களும் வே... மேலும் பார்க்க

சொந்த வீடு: வங்கியில் கடன் வாங்கும் முன் இதைக் கவனிக்காவிட்டால் மிகவும் கஷ்டப்படுவீர்கள்!

வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு கட்ட நினைக்கிறவர்கள் பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றாலும், ஒரே ஒரு விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அது, எந்த வயதில் நாம் முழுமையாகக் கடனைக் கட்டி ம... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பிறகு, "வருமான வரி தாக்கல் செய்தீர்களா?" என்று அரசாங்கம் கேட்டால்?| பணம் வளர்ப்போம்

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம் என்பது கடந்த அத்தியாயத்தில் நமக்குத் தெரிந்திருக்கும். ஒருவேளை, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால் என்னென்ன நடக்கும் என்பதை விளக்குகிறார் ஆடிட்டர்... மேலும் பார்க்க

'குறைஞ்ச சம்பளம் தானே'னு வருமானம் கணக்குத் தாக்கல் செய்யாமல் இருந்தா, கடன்.? | பணம் வளர்ப்போம்

'குறைவாக தான் வருமானம் வாங்குகிறேன்... நான் ஏன் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்? செய்யாமல் போனால் என்ன தவறு?' - இப்படி பல கேள்விகள் நம்மிடையே இருக்கிறது. நம்முடைய கேள்விகளுக்கு பதிலும், வ... மேலும் பார்க்க

100%, 50%, 25%, 10%... முதலீட்டில் உங்கள் லாபத்தை எப்படி கணக்கிடுவது என்று தெரியுமா?

''லாபத்தை சரியாகக் கணக்கிடுவது எப்படி என்று கற்றுக்கொள்ளவா வேண்டும்? அதுகூடவா நாங்கள் தெரியாமல் இருக்கிறோம்...'' இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு இப்படி கேட்கத் தோன்றும்.''ஒரு முதல... மேலும் பார்க்க

Retirement: அரசு ஊழியர்களே! ஓய்வுக்காலத்துக்குப் பின் உங்களை யார் காப்பாற்றுவார்கள்?

நீங்கள் அரசு ஊழியரா?பணி ஒய்வு பெறப்போகும் அந்தக் கடைசி நாளை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?கடந்த முப்பது வருடங்களாக உங்கள் வாழ்க்கை ஒரு அழகான தாள லயத்தில் இயங்கி இருக்கும். ஒவ்வொரு மாதமும் ... மேலும் பார்க்க