தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 8-ம் ஆண்டு நினைவுநாளில் முதல்வருக்கு வைக்...
Startup சாகசம் 61 : ‘இறக்குமதிதான் தரம்’ என்ற மாயையை உடைத்த உள்ளூர் ஸ்டார்ட்அப் - ஆரா பயோடெக்னாலஜிஸ்
இந்தியா இன்று உலகின் மிகவேகமாக வளரும் பயோடெக்னாலஜி சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. விவசாயம், கால்நடை மருத்துவம், மற்றும் மருத்துவக் கருவிகள் என்ற மூன்று துறைகளிலும் அறிவியல் தொழில்நுட்பத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
விவசாயத் துறையில், 140 கோடி மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய சவால் இருக்கிறது. மண் வளம் குறைதல், காலநிலை மாற்றம், பயிர் நோய்கள் என்று சவால்கள் அதிகரிக்கும் இந்நேரத்தில், Bio-stimulants, Molecular Diagnostics, மற்றும் Precision Agri தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையாக மாறி வருகின்றன.
கால்நடை மருத்துவத் துறையில், இந்தியா உலகின் மிகப்பெரிய கால்நடை கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று. ஆனால் நோய் கண்டறிதல் தொழில்நுட்பம் இன்னும் கிராமப்புற விவசாயிகளுக்கு எட்டாத நிலையில் உள்ளது. இந்த இடைவெளியே உள்நாட்டு Biotech நிறுவனங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக திகழ்கிறது.

மருத்துவக் கருவிகள் துறையில், இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது. Point-of-Care Diagnostics, Rapid Test Kits, RT-PCR தொழில்நுட்பங்கள் என்று தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இறக்குமதியை நம்பியிருந்த இந்தத் துறை, இப்போது "Make in India" என்ற கொள்கையின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை நோக்கி திரும்பி வருகிறது.
இந்த மூன்று துறைகளிலும் இணைந்து செயல்படும் நிறுவனங்கள், இந்தியாவின் எதிர்கால Bioeconomy-ஐ வடிவமைக்கும் சக்தியாக மாறும் — அதுவே இன்றைய மிகப்பெரிய வாய்ப்பு.
இந்த வார ஸ்டார்அப் சாகசத்தின் சென்னையிலிருந்து 400க்கும் மேற்பட்ட பயோ டெக்னாலஜி சார்ந்த பொருட்களை தயாரித்துவரும் AURA Biotechnologies நிறுவனத்தின் நிறுவனர் திரு.பழனிமுத்து அண்ணாமலை அவர்களின் சாகசக்கதையைத்தான் படிக்கப்போகின்றோம்.. சாதாரண நிறுவனங்களே பெரிய நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க போராடும் நிலையில் உளு்ளூர் பயோ டெக்னாலஜிஸ் நிறுவனங்கள் எப்படி முன்னேறி வருகின்றது என்பதைஇதைப்படிப்பதன் வழியே அறியலாம்.
``ஒரு பயோ-டெக் தொழிலைத் தொடங்கத் தூண்டுகோலாக இருந்த குறிப்பிட்ட பிரச்சனை அல்லது சந்தை இடைவெளி என்ன?"
""ஒரு தொழிலைத் தொடங்குவது என்பது வெறும் வணிக முடிவல்ல; அது ஒரு பிரச்சனையை தீர்க்கும் பொறுப்புணர்விலிருந்து தொடங்கும் பயணம்" — இந்த உண்மையே AURA Biotechnologies உருவான பின்னணி.
உயிரியல் மற்றும் வேளாண் துறைகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தில், இந்தியாவில் கால்நடை மருத்துவம், வேளாண் உள்ளீடுகள் (Agri Inputs), மற்றும் மூலக்கூறு நோயறிதல் (Molecular Diagnostics) ஆகிய துறைகளில் ஒரு மிகப்பெரிய சந்தை இடைவெளியை நேரில் கண்டேன். உயர்தர Diagnostic Kits மற்றும் மேம்பட்ட வேளாண் தொழில்நுட்ப தயாரிப்புகள் கிட்டத்தட்ட அனைத்தும் இறக்குமதி பொருட்களாகவே இருந்தன. அதனால் இவை விலையுயர்ந்தவையாகவும், கிராமப்புற விவசாயிகளுக்கும் சிறு கால்நடை வளர்ப்போருக்கும் எட்டாத தூரத்திலும் இருந்தன.
"கால்நடை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாததால், ஒரு சாதாரண பரிசோதனைக்கே விவசாயி பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது — இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வலியே என்னை ஒரு தொழில்முனைவோராக மாற்றியது.

இந்தப் பயணத்தின் ஆரம்பம் அறிவியலிலிருந்தே தொடங்கியது. நான் என்னுடைய Ph.D படிப்பை Council of Scientific and Industrial Research (CSIR) ஃபெலோஷிப்பின் மூலம் நிறைவு செய்தேன். அதன் பின்னர், Dr. Reddy's Laboratories நிறுவனத்தில் ஹைதராபாத்தில் சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன். அங்கு புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஆழமாக ஈடுபட்டு, ஆராய்ச்சி மற்றும் மருந்தியல் துறைகளில் பரந்த அனுபவம் பெற்றேன்.
தொழில்துறை அனுபவத்தை மேலும் விரிவுபடுத்திக்கொள்ளும் விருப்பத்தில், Tata Group நிறுவனத்தின் ஒரு பிரிவான Tata Enterprises-இல் ஃபார்மக்காலஜிஸ்ட்டாகப் பணியாற்றினேன். அதன் பிறகு, தற்போது பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக வளர்ந்துள்ள Anthem Biosciences-இல் ரிசர்ச் மேனேஜராகப் பொறுப்பு ஏற்றேன். பின்னர் சென்னைக்கு வந்து, Sri Ramachandra Medical Centre-இல் Chief Principal Scientist ஆக நான்கு ஆண்டுகள் சேவையாற்றினேன்.
இவ்வாறு பல்வேறு நிறுவனங்களில் திரட்டிய நீண்டகால ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை அனுபவங்களே AURA-வின் அடித்தளமாக அமைந்தன. அந்த அனுபவங்களின் அடிப்படையில், 2014 ஆம் ஆண்டு AURA Biotechnologies Private Limited நிறுவனம் தொடங்கப்பட்டது.
விவசாயத் துறையில் தயாரிப்புகளுக்குப் பஞ்சமில்லை என்றாலும், அறிவியல் ஆதாரமுள்ள, விளைச்சலை உண்மையிலேயே மேம்படுத்தும், சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான தயாரிப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. இந்த இடைவெளியை அகற்றுவதே AURA-வின் முதல் துடிப்பு. அதனால்தான் AURA நிறுவனத்தை துவக்கினோம்.
இன்று நிறுவனம் மனித மற்றும் கால்நடை, Diagnostic Kits, RT-PCR தொழில்நுட்பங்கள்மற்றும் விவசாயத்திற்கான Bio-stimulants, சிறப்பு உரங்கள் என்று பல்வேறு இந்தியத் தேவைகளுக்கான தீர்வுகளை ஆராய்ச்சி அடிப்படையில் வழங்கி வருகிறது. ஒரு பிரச்சனையிலிருந்து தொடங்கிய அந்த சிறு எண்ணம், இன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் வாழ்வை மாற்றும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது."
`2014-ல் ஒரு ஐடியாவாக இருந்த இந்த நிறுவனம், முதல் தயாரிப்பை சந்தைக்குக் கொண்டுவர எவ்வளவு காலம் எடுத்தது? முதல் வாடிக்கையாளரை எப்படி ஈர்த்தீர்கள்?"
``2014-ல் ஒரு சிறிய ஆராய்ச்சி எண்ணமாகத் தொடங்கிய AURA, அந்த எண்ணத்தை ஒரு நம்பகமான சந்தை தயாரிப்பாக மாற்றுவதற்கு சுமார் 18 முதல் 24 மாதங்கள் தேவைப்பட்டன. Prototype உருவாக்கம், ஆய்வக சோதனைகள், நிலைத்தன்மை பரிசோதனைகள் (Stability Studies), Field Validation — இந்த நான்கு கட்டங்களிலும் எந்தவித சமரசமும் செய்யவில்லை. ஒரு சிறிய Formulation மாற்றத்திற்கே பல வாரங்கள் மீண்டும் சோதிக்க வேண்டியிருந்தது. தோல்விகள் பல; ஆனால் ஒவ்வொரு தோல்வியும் தயாரிப்பை மேலும் வலுப்படுத்தியது.
முதல் வாடிக்கையாளரைப் பெறுவது மிகப்பெரிய சவால். அக்காலத்தில் "வெளிநாட்டு Brand தான் தரமானது" என்ற மனப்போக்கு சந்தையில் ஆழமாக வேரூன்றி இருந்தது. அதை மாற்றுவதற்கு நாங்கள் நேரடியாக கால்நடை மருத்துவர்கள், ஆய்வக நிபுணர்கள், விவசாயிகளைச் சந்தித்தோம். வெறும் விற்பனையாளர்களாக அல்லாமல், அறிவியல் விளக்கங்களுடனும் Field-level Results-உடனும் நேரடியாகத் தரவுகளை முன்வைத்தோம்.
"தயாரிப்பை விற்கவில்லை — நம்பிக்கையை விற்றோம். அந்த முதல் வாடிக்கையாளர்களே நம்முடைய மிகப்பெரிய Brand Ambassadors ஆனார்கள்."

சில ஆரம்ப வாடிக்கையாளர்களுக்கு Trial Basis-ல் தயாரிப்புகளை வழங்கி, அவர்களின் feedback-ஐ அடிப்படையாகக் கொண்டு மேலும் மேம்படுத்தினோம். அந்த "First Adopters" என்றுமே மறக்க முடியாதவர்கள் — ஏனென்றால் அவர்கள்தான் AURA-வின் உண்மையான அடித்தளம்.
இன்று நாங்கள் உயிர் அறிவியல், கால்நடை நோயறிதல், மனித நோயறிதல், கோழி நோயறிதல், நீர்வாழ் உயிரின நோயறிதல் ஆகிய துறைகளில் தயாரிப்புகளை எங்கள் நிறுவனம் வழங்கிவருகின்றது.
``எவ்வளவு ஆரம்ப முதலீடு தேவைப்பட்டது? Bootstrapped-ஆக தொடங்கினீர்களா அல்லது வெளி முதலீட்டாளர்கள் யாரேனும் நிதி வழங்கினார்களா?"
``பெரும்பாலான Startup கதைகளில் Venture Capital பெற்று வளர்ந்த கதைகள்தான் கேட்கிறோம். AURA-வின் கதை சற்று வித்தியாசமானது — முழுமையாக Bootstrapped. சொந்த சேமிப்புகள், குடும்ப ஆதரவு, மற்றும் தொழிலில் இருந்து மீண்டும் Reinvest செய்யப்பட்ட வருவாய் — இவை மட்டுமே ஆரம்ப மூலதனம்.
ஆரம்ப Seed Capital முக்கியமாக ஆய்வக அமைப்பு, Research Equipment, Prototype Development, Raw Materials Procurement, மற்றும் Regulatory Compliance நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. எங்களின் அணுகுமுறை 'Slow but Sustainable Growth' — வெளி முதலீட்டை உடனடியாக தேடுவதற்குப் பதிலாக, தயாரிப்பின் தரம் மற்றும் சந்தை நம்பிக்கையை முதலில் உருவாக்குவதில் கவனம் செலுத்தினோம்.
"ஒரு Startup-ன் உண்மையான முதலீடு வெறும் பணமல்ல — ஒரு பிரச்சனையை தீர்க்கும் உறுதி, தொடர்ந்து கற்கும் மனப்பாங்கு, தோல்விகளை சமாளிக்கும் துணிச்சல் — இந்த மூன்றுமே AURA-வின் ஆரம்ப மூலதனம்."
பின்னாளில் தயாரிப்புகள் சந்தையில் நம்பிக்கையைப் பெற்றதும், தொழில்துறை ஒத்துழைப்புகளும் Strategic Partnerships-உம் இயல்பாக உருவாகத் தொடங்கின. ஆனால் ஆரம்ப வெற்றியின் அடிப்படை 'Bootstrapped Passion and Persistence' என்பதில்தான் இருந்தது என்று பெருமையாகச் சொல்வேன்.
இன்று AURA Biotechnologies Private Limited நிறுவனம் முக்கியமாக மூன்று துறைகளில் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முதலாவது, விவசாயத்துறை. இந்தத் துறையில் ஃபெர்டிலைசர்ஸ், உயிரியல் தூண்டிகள், மைக்ரோநியூட்ரியன்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து வகையான வேளாண் உள்ளீட்டு தயாரிப்புகளையும் தயாரித்து வருகிறோம். இந்தப் பிரிவில் மட்டும் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை உருவாக்கி சந்தைப்படுத்தி வருகிறோம்.
இரண்டாவது, பயோடெக்னாலஜி துறை. குறிப்பாக கால்நடை மற்றும் விலங்கு நோய்க் கண்டறிதல் பகுதியில் கவனம் செலுத்தி வருகிறோம். இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட நோய்க் கண்டறிதல் தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறோம்.
இதற்கு மேலாக, மருத்துவக் கருவிகள் துறையிலும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அந்தப் பிரிவில் தற்போது மூன்று முக்கிய தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறோம்.
கடந்த 12 ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த தயாரிப்புகள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தயாரிப்பையும் நாங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்து உருவாக்கி, அதற்கான தேவையான அங்கீகாரத்தைப் பெற்று, உற்பத்தி செய்து சந்தைக்கு வழங்கி வருகிறோம்."

``அரசு மருத்துவமனைகள் அல்லது பெரிய கார்ப்பரேட் பண்ணைகள் போன்ற பெரிய வாடிக்கையாளர்களை எப்படித் தொடர்புகொண்டு ஆர்டர்களை எடுத்தீர்கள்?"
``அரசு மருத்துவமனைகளும் பெரிய Corporate Farms-உம் புதிய நிறுவனங்களை உடனடியாக நம்புவதில்லை — அது தெரிந்த உண்மை. அவர்கள் பார்ப்பது மூன்றே விஷயம்: தயாரிப்பின் தரம், அறிவியல் ஆதாரம், தொடர்ந்து வழங்கும் திறன். அதனால் நாங்கள் 'விற்பனை' மீது அல்ல — 'நம்பிக்கை உருவாக்குதல்' மீதே கவனம் செலுத்தினோம்.
Veterinary Doctors, Laboratory Professionals, Farm Consultants, Field Officers — இவர்களிடம் நேரடி தொடர்புகளை முதலில் உருவாக்கினோம். Field Demonstrations நடத்தி, Scientific Validation Reports, Sensitivity & Specificity Data — எல்லாவற்றையும் நேரில் விளக்கினோம். Corporate Farms-ஐ அணுகும்போது அவர்களின் நடைமுறைப் பிரச்சனைகளை — கால்நடை கர்ப்பக் கண்டறிதல், நோய் பரவல், Farm Productivity — புரிந்துகொண்டு, Practical Demonstration மூலம் எங்கள் தயாரிப்புகள் எவ்வாறு நேரடியாக உதவுகின்றன என்று காட்டினோம்.
"எங்களின் வளர்ச்சி பெரும்பாலும் 'Word of Trust' மூலமாகவே நடந்தது. ஒரு மருத்துவர் மற்றொருவரிடம் பரிந்துரைத்த நம்பிக்கையே AURA-வின் மிகப்பெரிய Marketing Strength."
``பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக, ஒரு உள்ளூர் பிராண்டாக உங்களை நிலைநிறுத்த கையாண்ட தனித்துவமான உத்தி என்ன?"
``Diagnostics மற்றும் Agri-Biotech துறைகளில் "வெளிநாட்டு தயாரிப்புகளே தரமானவை" என்ற மனப்போக்கு மிகவும் வலுவாக இருந்த காலத்தில், ஒரு இந்திய Local Brand ஆக நிலைநிறுத்துவது எளிதல்ல. ஆனால் நாங்கள் எடுத்த முடிவு தெளிவானது: "Multinational Companies-ஐ Copy செய்யப் போவதில்லை — இந்தியாவின் தேவையை இந்தியப் பார்வையில் புரிந்து தீர்வு வழங்குவோம்."
எங்கள் நான்கு முக்கிய உத்திகள்:
Research-driven Localization: இந்திய காலநிலை, விவசாய முறைகள், Field Challenges ஆகியவற்றை மையமாகக் கொண்டு தயாரிப்புகள் வடிவமைத்தோம்.
Affordable Innovation: Premium Performance at Practical Pricing — உயர்தரம், கட்டுப்படியாகும் விலையில்.
Technical Partnership: விற்று முடிந்தவுடன் விலகாமல், Field Visits, Training, Troubleshooting வழங்கி 'Partner' ஆனோம்.
Make in India: சொந்த R&D-ல் முதலீடு; Regulatory Compliance-ல் எந்த சமரசமும் இல்லை.
"ஒரு Local Brand வெற்றி பெற Multinational-ஆக இருக்க வேண்டியதில்லை. Local Market-ஐ ஆழமாகப் புரிந்துகொண்டு, உண்மையான தீர்வுகளை வழங்கும் திறனே மிகப்பெரிய போட்டி பலம்."

``வருவாயில் எவ்வளவு சதவீதத்தை Innovation-க்காக செலவிடுகிறீர்கள்? அரசிடம் (Start-up India / TDB) மானியங்கள் பெற்றீர்களா?"
``AURA Biotechnologies-ல் Innovation ஒரு தனி Department அல்ல — அது நிறுவனத்தின் உயிர்நாடி. Biotechnology, Diagnostics, Molecular Biology, Agri-Science போன்ற துறைகள் மிக வேகமாக மாறுகின்றன, இன்று செயல்படும் தொழில்நுட்பம் சில ஆண்டுகளில் பழமையாகிவிடும். அதனால் தொடர்ச்சியான Innovation இல்லாமல் இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியாது.
ஆண்டுதோறும் வருவாயில் 10% முதல் 20% வரை R&D மற்றும் Innovation-க்கு ஒதுக்கப்படுகிறது. இதில் புதிய Formulations, Molecular Diagnostics Research, Validation Studies, Field Trials, Quality Improvement, Advanced Manufacturing Technologies அனைத்தும் அடங்கும். Start-up India, Make in India, BIRAC, Technology Development Board (TDB) போன்ற அரசு முயற்சிகள் Research Collaborations, Technical Guidance, Incubation Opportunities ஆகியவற்றில் ஊக்கமாக இருந்தன.
"ஒரு Biotech நிறுவனத்தின் உண்மையான மதிப்பு Factory Size-ல் இல்லை — அது உருவாக்கும் Scientific Capability-ல்தான் உள்ளது. AURA-வில் 'Innovation is not an option; it is our culture.'"
``இதுவரை நீங்கள் சந்தித்த மிகப்பெரிய சிக்கல் என்ன? அதை எப்படி சரி செய்தீர்கள்?"
``மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் — "ஒரு புதிய இந்திய Biotech Brand மீது சந்தையின் நம்பிக்கையை உருவாக்குவது." "Imported Products தான் தரமானவை" என்ற மனநிலை மிகவும் வலுவாக இருந்த சூழலில், Accuracy மற்றும் Reliability மிக முக்கியமான துறைகளில் — மருத்துவம், கால்நடை நோயறிதல் — புதிய நிறுவனத்தை நம்ப பலரும் தயங்கினர்.
Regulatory Approvals, Quality Validations, Stability Studies — இவை மிகவும் கடினமான, நேரம் பிடிக்கும் செயல்முறைகள். ஆராய்ச்சி மட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட Formulation, வயல் நிலைமைகளில் அதே அளவில் வேலை செய்யாத சூழலும் வந்தது. COVID காலத்தில் Supply Chain, Raw Material Shortage, Logistics என்று பல சவால்கள் ஒரே நேரத்தில் வந்தன. ஆனால் அதே COVID, சொந்த நாட்டு Diagnostic Manufacturing-ன் அவசியத்தை இந்தியா முழுமையாக உணர வைத்தது — எங்கள் உள்நாட்டு உற்பத்தித் திறனும் விரைவான தகவமைப்பு ஆற்றலும் சவாலை வாய்ப்பாக மாற்றியது.
"பிரச்சனைகளை மறைக்க முயலவில்லை; Field Feedback-ஐ திறந்த மனதுடன் ஏற்று தொடர்ந்து மேம்படுத்தினோம். ஒவ்வொரு சவாலும் எங்களுக்கு ஒரு புதிய கற்றல் வாய்ப்பு — அந்த கடினமான காலங்களில்தான் AURA-வின் அடித்தளம் உருவானது."

``AURA Biotechnologies-ன் எதிர்கால திட்டம் என்ன?"
``AURA-வின் எதிர்கால திட்டம் வெறும் நிறுவன வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டதல்ல — இந்தியாவில் உலகத் தரமான Biotechnology மற்றும் Agri-Science Ecosystem-ஐ உருவாக்கும் நீண்டகால பார்வையைக் கொண்டது.
முக்கிய எதிர்கால இலக்குகள்:
Advanced Rapid Testing Platforms மற்றும் RT-PCR Technologies — இந்தியாவிலேயே உருவாக்கல்
வேதியியல் சார்பை குறைக்க Bio-stimulants, Organic Inputs, Next-gen Crop Solutions
Climate Change, வெப்ப அழுத்த சவால்களை எதிர்கொள்ள புதிய ஆராய்ச்சி
"Made in India, Trusted Globally" — சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி
Advanced R&D Infrastructure மற்றும் புதிய உற்பத்தி ஆலைகள் விரிவாக்கம்
இளம் விஞ்ஞானிகளுக்கு Innovation சார்ந்த Ecosystem உருவாக்கல்
"AURA-வின் எதிர்காலம் வெறும் Business Growth அல்ல. இந்தியாவில் உருவாகும் அறிவியல் திறன்கள் உலகத் தரத்தில் போட்டியிட முடியும் என்பதை நிரூபிப்பதே எங்கள் உண்மையான இலக்கு — 'Innovation with Purpose.'"
மனிதர்கள், கால்நடைகள், மற்றும் விவசாயத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தீர்வுகளை தொடர்ந்து உருவாக்குவதே எங்கள் எதிர்கால பயணம். இரண்டு பேரில் தொடங்கிய அந்த சிறு அடி, இன்று 250 குடும்பங்களின் வாழ்வை வழிநடத்துகிறது — அடுத்த தலைமுறையை குணமாக்கும் கனவுடன் தொடர்கிறது."














