செய்திகள் :

'திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை உண்மைதான்; தவெக ஆட்சியை.!'- விகடனுக்கு பெ.சண்முகம் பேட்டி

post image

திமுக, அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது உண்மைதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விகடன் பேட்டியில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

விகடன் பேட்டியில் பேசிய பெ.சண்முகம், " அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி இரண்டையும் மக்கள் புறகணித்திருக்கிறார்கள். இந்த இரண்டு அணிக்கும் எதிராகத்தான் தீர்பளித்திருக்கிறார்கள்.

பெ.சண்முகம் - CPIM மாநில செயலாளர்
பெ.சண்முகம் - CPIM மாநில செயலாளர்

தனிப்பெரும் கட்சியாக தவெக கூடுதல் இடங்களை வென்று ஆட்சியமைப்பதற்கு வாய்ப்புள்ளக் கட்சியாக அதுதான் இருந்தது. அதனால் தவெக ஆட்சி அமைக்கக்கூடாது, இதை தடுக்கும் நோக்கத்துடன் இத்தகைய முயற்சிகள் (திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள்) நடைபெற்றன என்பது உண்மைதான்.

இப்படியான யோசனைகள் முன்வைக்கப்பட்டன என்பதும் உண்மைதான். ஆனால் இது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரும், புதிருமாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

பெ.சண்முகம் - CPIM மாநில செயலாளர்
பெ.சண்முகம் - CPIM மாநில செயலாளர்

திடீரென்று இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்ததை ஒட்டி ஒரு கட்சி ஆட்சி அமைப்பதையும், மற்றொரு கட்சி ஆதரவு அளிப்பதையும் மக்கள் ஏற்கமாட்டார்கள்.

மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என்பதால் இதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்லிவிட்டோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

முழுமையானப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 8-ம் ஆண்டு நினைவுநாளில் முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் துள்ளத் துடிக்க உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரிடம் இன்னமும் கண்ணீர் நிரம்பி வழிகிறது. 8-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி படுகொலை... மேலும் பார்க்க

8-ம் வகுப்பு முதல் ரசிகர்; விஜய்யைக் கவர்ந்த பேச்சு திறமை - அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் பின்னணி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி, வெற்றி பெற்றவர் ரமேஷ். இதனைத் தொடர்ந்து, அமைச்சரவையிலும் இடம்பெற்ற... மேலும் பார்க்க

"சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக கூட்டணி அமைச்சரவை!" - பாராட்டிய மாரி செல்வராஜ்

தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்றைய தினம் 23 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். தவெக ஆட்சியமைத்ததற்கு வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டைத் தொடர்ந்து தற்போது தவெக அமைச்சரவையில... மேலும் பார்க்க

Startup சாகசம் 61 : ‘இறக்குமதிதான் தரம்’ என்ற மாயையை உடைத்த உள்ளூர் ஸ்டார்ட்அப் - ஆரா பயோடெக்னாலஜிஸ்

AURA BiotechnologiesStartup சாகசம்இந்தியா இன்று உலகின் மிகவேகமாக வளரும் பயோடெக்னாலஜி சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. விவசாயம், கால்நடை மருத்துவம், மற்றும் மருத்துவக் கருவிகள் என்ற மூன்று துறைக... மேலும் பார்க்க

`கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு பாகிஸ்தானில் இருந்து குவியும் ஆதரவாளர்கள்?' - சர்ச்சையும் பின்னணியும்

வெறும் ஆறு நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) என்ற நையாண்டிக் குழு, சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) விட அதிக ... மேலும் பார்க்க

விசிக Vs திமுக: ``சுயநல சாணக்கியத்தனம் யாருடையது?" - முற்றும் வார்த்தைப்போர்!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தக் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான தலைவர்களில் ஒருவர் த... மேலும் பார்க்க