கோவையில் டாஸ்மாக் மூடலால் கல்லா கட்டும் FL 2 பார்! - சட்ட சிக்கலை தவிர்க்க நூதன ...
'ஒரு சீட்டு, இரண்டு சீட்டு என ஏளனம் செய்தபோதே நான் சொன்னேன்.!' - முதல்வர் விஜய் குறித்து மிஷ்கின்
'தலைவன் தலைவி' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'பரிமளா & கோ'.
ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, அனந்திகா, மிஷ்கின், சாண்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், “தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பரப்புரையின் சமயத்தில் அவர் கன்னியாகுமரி சென்ற போதே மக்கள் எழுச்சி சுனாமியாக இருந்ததை நான் பார்த்தேன்.
அந்த நேரத்தில் ஒரு சீட்டு, இரண்டு சீட்டு என ஏளனம் செய்த போது, அப்படி எல்லாம் இருக்காது என நான் அன்றைக்கே கூறினேன்.
அப்போதே இதை சொல்ல வேண்டியது தானே ஜெயித்த உடனே இப்படி கூறுகிறீர்கள் என்று? இப்போது இதைப் பார்ப்பவர்கள் சொல்வார்கள்.
இருந்த போதிலும், தேர்தல் சமயத்தில் ஒரு சார்பு நிலையை எடுக்க முடியாது. ஏனெனில் உதயநிதி குடும்பமும் எனக்கு நன்றாக தெரியும்.
இந்த சூழலில் தற்போதைய முதலமைச்சரிடம் நான் எந்த விதமான கோரிக்கையும் கேட்கப் போவதில்லை. தூரமாக இருந்து அவரின் செயல்பாடுகளை ரசிப்பேன். நான் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டேன்” என்று பேசியிருக்கிறார்.
















