செய்திகள் :

"தவெக ஆட்சியில் 'இவர்கள்' கையில் தான் கல்வித்துறை இருக்க வேண்டும்" - ஆளூர் ஷா நவாஸ்

post image

சுமார் 4 நாள்களுக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு நேற்று ஆதரவு அளித்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கும் விஜய்யிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் விசிகவின் முக்கிய நிர்வாகி ஆளூர் ஷா நவாஸ்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சராகும் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்போருக்கும் வாழ்த்துகள்.

ஆளூர் ஷா நவாஸ் பதிவு
ஆளூர் ஷா நவாஸ் பதிவு

கடந்த திமுக ஆட்சியில் திரு.கோவி செழியன், திரு.அன்பில் மகேஸ் ஆகியோரிடம் கல்வித்துறை இருந்தது. கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து சமூகநீதி அடிப்படையில் மேலெழுந்து வந்தவர்களின் கைகளில் அத்துறை இருப்பதே நன்று. தவெக அமைச்சரவையிலும் அந்நிலை தொடர வேண்டும்.

தமிழ்நாட்டின் கல்வி வரலாறும் அரசியல் வரலாறும் வேறு வேறல்ல. கல்வியே நம் அரசியல். கல்விக்காகவே நம் அரசியல்". என்றிருக்கிறார்.

'சி.ஜோசப் விஜய் எனும் நான்..!' - தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார் தவெக தலைவர் விஜய்!

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு மே 4-ம் தேதி முடிவுகள் வெளியானது. இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றிருந்தது. ஆனால், பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆ... மேலும் பார்க்க

`தூது அனுப்பிய எடப்பாடி; பிடிகொடுக்காத சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி' 60% vs 40% - உடைகிறதா அதிமுக?

அ.தி.மு.கவில் தலைமைக்கு எதிராக முன்னணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட க... மேலும் பார்க்க

TVK: 'IRS அதிகாரி டு தமிழக அமைச்சர்' - விஜய்யின் ‘நிழல்’ அருண் ராஜ் கடந்து வந்த பாதை!

முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் தவெக தலைவர் விஜய். அவரோடு 9 அமைச்சர்களும் பொறுப்பேற்கவுள்ளனர். கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான அருண் ராஜும் அமைச்சரவையில் இ... மேலும் பார்க்க

TVK: விஜய்யின் ‘குட் புக்ஸில்’ இடம்பிடித்தது எப்படி? அமைச்சர் ராஜ் மோகனின் அசுர வளர்ச்சி பின்னணி!

தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். விஜய்யோடு சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றிருக்கின்றனர். அதில் முக்கியமானவர் தவெகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ் மோகன். அவருக்கும் அம... மேலும் பார்க்க