ஸ்பெயின் எல்லையை உடைத்த மொராக்கோ மக்கள்; கடலில் கரைந்த உயிர்கள்; களமிறங்கும் ராண...
தவெக: ``முதலில் மின்வெட்டுப் பிரச்னை; இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை" - ஸ்டாலின் விமர்சனம்
தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை மாதத்தில் வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் எழுந்தன.
பில்லிங் செயல்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னைகள் மற்றும் மீட்டர் கணக்கீட்டுக் குறைபாடுகளே இந்தத் திடீர் கட்டண உயர்வுக்குக் காரணம் என்று தகவல்கள் வெளியாகின.
மின்நுகர்வோரின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளை நேரடியாக மறுஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) உத்தரவிட்டுள்ளது.
மின்வாரியத் தலைவர் அருண் ராய் அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

இந்த நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், யூடியூப்பர் VJ சித்து-வின் மின்சாரக் கட்டணம் தொடர்பான வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, ``த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்... முதலில் மின்வெட்டுப் பிரச்னை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















