செய்திகள் :

தவெக: ``ரெட்டி கேங் துணையோடு ஆட்சி..!" - முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் அப்பாவு

post image

தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாட்டின் மீது எந்த அக்கறையும் இல்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான இடத்தை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய வேண்டும் என்றும், இந்தி மொழியை கற்க கூடாது என்ற குறுகிய மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் வியப்பாக இல்லை. காரணம் தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் மேகதாது அணை விவகாரம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் போன்ற வழக்குகளில் உங்களின் மெத்தனப் போக்கால் தமிழர்களின் உரிமைகளை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பறிகொடுத்து வருகிறீர்களே CM Sir.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

"தங்களின் டெல்லி எஜமான் பாஜகவின்" நன் மதிப்பை பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வாதிடாமல் தமிழ்நாட்டை அவமதிப்பதும்,தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதும், ஒன்றிய அரசு தரவேண்டிய கல்வி நிதியை கேட்டுப் பெறாமல் கள்ள மவுனம் சாதிப்பதும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஒன்றிய அரசின் முடிவுக்கு ஒப்புதல் என்று தொடர்ந்து நேரடியாக ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்து விட்டீர்களே CM sir !

ஆட்சிக்கு வந்த உங்களுக்கு கொள்கையோ, தமிழ் பற்றோ, தமிழ்நாட்டின் மீது பற்றோ, தமிழ்நாட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற மனப்பான்மையோ இல்லாமல், தங்களை சுற்றி இருக்கும் "ரெட்டி கேங் துணையோடு" ஆட்சி, அதிகாரம் மற்றும் பணம் மீது மோகம் கொண்டு பாஜகவின் உதவியோடு ஆட்சி அமைத்து சில கல்லாப்பெட்டி கட்சிகளின் கூட்டணியோடு ஆட்சியில் தொடரும் விஜய் அவர்களே! சிலரை சிலநாள் ஏமாற்றலாம்! பலரை பல நாள் ஏமாற்றலாம்! எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது CM sir !

உங்கள் மக்கள் விரோத போக்கை தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள் உங்கள் அரசியல் ஆட்டத்திற்கு விரைவில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுகட்ட தயாராகி விட்டார்கள் CM Sir!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`3 மணிக்கே எழுந்து ஆய்வுக்குச் செல்கிறேன்; சின்னச்சின்ன பிரச்னைகளை...' - அமைச்சர் தமிழன் பார்த்திபன்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சரிவர பேருந்து வசதி செய்துதரவில்லை என்ற புகார் கடந்த சில தினங்களாக பரபர செய்திகளாயின.இந்தச் ச... மேலும் பார்க்க

"ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில்‌ பேரறிஞர் அண்ணாவின் 118- வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், தாதகாப்பட்டியில் நேற்றிரவு நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ப... மேலும் பார்க்க

தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல்: ``இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா?" - கராத்தே தியாகராஜன் கேள்வி

தவெக ஆட்சி அமைத்ததற்குப் பிறகு அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

`பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி' பாஜக தலைவர்கள் கண்டனம்! - என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் ஸ்டாண்டப் க... மேலும் பார்க்க

“முதல்வர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும்...”- அன்புமணி காட்டம்!

சிப்காட், என்.எல்.சி சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்த துடிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து தவெக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " கடலூர் மாவட்... மேலும் பார்க்க

'உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்!'- நா தழுதழுக்க பேசி ஸ்டாலினிடம் கையெடுத்துக் கும்பிட்ட துரைமுருகன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (செப்.19) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்பு காரணமாக முப்பெரும் விழா தள்ளி வைக்கப... மேலும் பார்க்க