செய்திகள் :

தவெக வழக்கு : `எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளீர்கள்?' - உயர் நீதிமன்றம் காட்டம் | முழு விவரம்

post image

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக அரசு, ஜனவரி 5ம் தேதி அரசிதழில் வெளியிட்டது.

இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சி.டி.ஆர் நிர்மல் குமார்

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, த.வெ.க. தரப்பில், `பொதுக்கூட்டங்கள் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது. நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன' என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதிகள், `இந்த விதிகளில் என்ன தவறு உள்ளது. கரூரில் நடந்த வேதனைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல துவங்கப்படுகின்றன. அவை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. பல தேர்தல்களில் போட்டியிட்டு, எம்.பி. - எம்.எல்.ஏ.க்களை பெற்ற நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு?' எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், த.வெ.க. எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது எனவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

விஜய் பரப்புரை
விஜய் பரப்புரை

அரசுத்தரப்பில், ``இந்த வழிகாட்டி வழிமுறைகள்படி த.வெ.க. இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்த நிபந்தனைகளின்படி 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதால், அதை தவிர்க்க 4,998 பங்கேற்பாளர்க்ள் என கூறி விண்ணப்பிக்கின்றனர். ஒரே நாளில் ஒரே இடத்துக்கு பல கட்சிகள் விண்ணப்பிக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால் முதலில் வருவோருக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது" என விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், ``பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த வழிகாட்டு விதிமுறைகளை ஏற்றுள்ள நிலையில், மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகு தான், வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கூரை அமைத்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்க கூடாது என அரசுத்தரப்பை கேட்ட நீதிபதிகள், த.வெ.க. மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

பாஜக அரசு vs நீதித்துறை: `NJAC (2014) டு NCERT (2026)' - ஆண்டுகள் கடந்தும் தொடரும் ‘நிழல் யுத்தம்’

என்.சி.இ.ஆர்.டி பாட புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. `இதில் தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் நிச்சயம... மேலும் பார்க்க

Dhawan: முதல் மனைவி தொடர்ந்த வழக்கு.! `ஏமாற்றிப் பெற்ற சொத்து' - சட்டப் போராட்டத்தில் தவான் வெற்றி

2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஷிகார் தவான், ஆகஸ்ட் 2024-ல் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது 'Da One Sports' என்ற... மேலும் பார்க்க

"இஸ்லாமியருக்கு இடம் மறுப்பு, தலித் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு.." - உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலையளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற... மேலும் பார்க்க

`தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? ; நீதிமன்ற நேரத்தை வீண் அடிக்காதீர்' - ராமதாஸ் மனு தள்ளுபடி

பா.ம.க.வில் டாக்டர் ராமதஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் கட்சி யாருக்கு என்று மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி... மேலும் பார்க்க

`ED ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது; கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்க.!" - உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழக ட... மேலும் பார்க்க

`இலவசக் கலாசாரம் கவலையளிக்கிறது' - தமிழக அரசின் மனுமீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

மின்சாரத் துறை சட்டத் திருத்தம் 2024-ன் விதி 23-ஐ எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாநில அரசுகளின் இலவசத் திட்டங்கள் குறித்துத் தனது கடுமையான அதிருப்தி... மேலும் பார்க்க