செய்திகள் :

`தவெக-வுக்கு அதிமுக ஆதரவா..?' - நிர்வாகிகள் ஆலோசனைக்குப் பிறகு கே.பி.முனுசாமி சொன்ன முக்கிய தகவல்!

post image

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளிடம் பேசி வருகிறது. அதன் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தவெக தலைவர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸின் ஆதரவை உறுதிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் பனையூரில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தங்கள் ஆதரவுக் கடிதத்தை வழங்கினர். அதற்குப் பிறகு, தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து, ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உரிமைக் கோரினார். நாளை பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் கூறப்பட்டு வந்தது. மேலும், விசிக தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக நாளை விசிக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.

கே.பி.முனுசாமி

இந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியின் பசுமைவழிச் சாலை இல்லத்தில் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒ.எஸ்.மணியன் தரப்பு தவெக-வுக்கு ஆதரவு தரவே தேவையில்லை எனவும், சி.வி சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தரப்பு அமைச்சரவையில் இடம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆதரவு தருவோம் எனவும், இன்னொரு தரப்பு நிபந்தனையற்ற ஆதரவு தரலாம் எனவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கே.பி.முனுசாமி பசுமைவழிச் சாலை இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தவெக-வுக்கு அதிமுக ஆதரவு என பல்வேறு செய்திகள் வெளியாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. அது முற்றிலும் தவறான செய்தி. அதிமுக மிகப்பெரிய இயக்கம். சீரோடும், சிறப்போடும் செயல்படும் இந்த இயக்கம் எந்தச் சூழலிலும் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை. இதை எடப்பாடியாரின் அனுமதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க

காங்கிரஸ்: 'பச்சைத் துரோகம்; சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி' - டி.ஆர்.பாலு காட்டம்!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. இந்த விவகாரம் திமுக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு, கூட்டணி பலத்தில் 5 தொ... மேலும் பார்க்க

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் மம்தா: பதவியேற்க தயாராகும் பாஜக - பதற்றத்தில் மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. ஆனால் இத்தேர்தலில் வெறும் 80 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ள மம்தா ... மேலும் பார்க்க