செய்திகள் :

``தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்குவது முதல்வரின் விருப்பம்"- அமைச்சர் நிர்மல்குமார்

post image

அமைச்சர் நிர்மல் குமார், மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் நடைபெறும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,"மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படுவது மகிழ்ச்சியான விஷயம். மதுரை மக்களின் அன்பைப் பெற்ற முதல்வர், அவர்களது சகோதரராக இங்கு வருகிறார். இந்தத் திட்டத்தை மதுரையில் தொடங்க வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம்.

முதல்வர் வருகையையொட்டி பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வழக்கமாக பேனர்கள் வைக்கப்படுவது உண்டு. ஆனால் மதுரையில் முதல்வர் செல்லும் வழித்தடங்களில் பேனர்கள், கொடிகள் வைக்கப்படவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனையின் வழக்கமான செயல்பாடுகளுக்கும், நோயாளிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களின் வழக்கமான போக்குவரத்துக்கும் இடையூறு இருக்காது.

விழா நடைபெறும் அரங்கில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அமர முடியும் என்பதால் பயனாளிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி கொடுத்துள்ளோம்.  விழாவுக்குப் பின்னர் முதல்வர் வார்டுக்குச் சென்று குழந்தைகளைப் பார்வையிடுவார், அவருடன் மருத்துவர்கள் மட்டுமே இருப்பார்கள்.

பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த புற்றுநோய் மருத்துவமனைத் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் லா ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைப்பதற்கான இடம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.இதுபோன்ற மேலும் பல திட்டங்கள் மதுரைக்கு வர உள்ளது" என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

ஜெம் வீரமணி: 'விஜய், ஆதவ் , சி.டி.ஆருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்' - டி.ஆர் பாலு புகார்

ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகிய மூவரையும் 'சம்மன்' செ... மேலும் பார்க்க

மதுரை: மும்மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதலாவதாக தங்க மோதிரம் வழங்கிய முதல்வர் விஜய்!

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடங்கி இருக்கிறது. திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார் முதலமைச்சர் விஜய்.இதற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்திலிருந்து, ம... மேலும் பார்க்க

நெல்லை 'அன்புச் சுவர்': அன்பைப் பகிர்கிறோம்... `பொறுப்பை'யும் பகிர்வோமே!

குவியும் ஆடைகளும் தயங்கும் மக்களும்: நெல்லை அன்புச் சுவரின் நிலை“நமக்குத் தேவையில்லாதது, இன்னொருவருக்குத் தேவையாக இருக்கலாம்” என்ற நோக்கில், 2017-ஆம் ஆண்டு அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூர... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஈரானிடம் இல்லையா? எண்ணெய் விலை சொல்லும் உலக சந்தை, முட்டாளா? - அமெரிக்காவை கலாய்த்த ஈரான்

ஈரான் போர் தொடங்கி ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கப்பட்டதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் பெரும்பாலும் இருக்கிறது. அவ்வப்போது உச்சத்தை வேறு தொட்டிருக்கிறது. ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு,... மேலும் பார்க்க

BB TAMIL 10: அடாவடியாக அசரடித்த முனி; பாலின சமத்துவத்துடன் க்ரூப்பிஸம் - நடந்தது என்ன?|சுரேஷ் கண்ணன்

BB TAMIL 10: 3rd WEEKபிக் பாஸ் சீசன் பத்து இன்னமும் கூட சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் மாறவில்லை. ஆகவே என்னவாவது அதிரடியான மாற்றங்களைச் செய்து பிக்அப் ஆக வைக்கும் முயற்சியில் பிக் பாஸ் டீம் இருக்கிறது.... மேலும் பார்க்க

டெல்லியில் இளைஞரை அறைந்த பாஜக அமைச்சர்: "வாக்களர்களுக்கு அஞ்சாத அதிகார முகம் இது" - ராகுல் காந்தி

டெல்லியைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஷ் வர்மா. இவரிடம் இளைஞர் ஒருவர் மோசமான சாலைகள் குறித்துக் கேள்வி கேட்டபோது, அந்த இளைஞரை பர்வேஷ் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.அமைச... மேலும் பார்க்க