செய்திகள் :

தாளவாடி: இளைஞரை சங்கிலியில் கட்டிவைத்து சித்ரவதை; கொடூர காவல்துறையின் பதைபதைக்க வைக்கும் வீடியோ

post image

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகில் உள்ள திகினாரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாது (எ) மாதேவா. 20 வயதான இவர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை என மாதேவாவை அழைத்துச் சென்ற தாளவாடி காவல்துறையினர், காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள காவலர் ஓய்வறை ஜன்னல் கம்பியில் சங்கிலியால் கைகளைக் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கித் துன்புறுத்தியுள்ளனர்.

மாதேவாவிற்குத் தொடர்பில்லாத மற்றொரு கொள்ளை சம்பவத்திலும் பொறுப்பேற்று ஒத்துக்கொள்ளுமாறு சித்ரவதை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் கதறும் இளைஞர் மாதேவாவை மனிதாபமற்ற முறையில் தாக்கும் கொடூர காவலர்களின் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி காண்போரைப் பதற வைக்கின்றன.

இளைஞரைச் சித்ரவதை செய்யும் காவலர்கள்
இளைஞரைச் சித்ரவதை செய்யும் காவலர்கள்

இந்தக் கொடூரம் குறித்து விளக்கம் அளித்துள்ள‌ ஈரோடு மாவட்ட காவல்துறை, " சம்பந்தப்பட்ட காணொளி கடந்த 2024- ம் ஆண்டு நடைபெற்ற ஒரு பழைய நிகழ்வு. இது தொடர்பாக ஏற்கனவே உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த காவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன" என விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள், "காவல் நிலைய மரணங்கள் அல்லது கொடூரத் தாக்குதல்கள் நடக்கும்போது, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வெறும் பணியிட மாற்றம் அல்லது தற்காலிக சஸ்பெண்ட் போன்ற சடங்கு ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன.

தவறு செய்யும் போலீஸார் மீது உடனடியாக குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் இத்தகைய மனித உரிமை மீறல்கள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். இந்தக் கொடூரம் எப்போது யாரால் நிகழ்த்தப்பட்டிருந்தாலும்‌, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகள் ஆணையம் தலையிட வேண்டும்" என்றனர்.

தெருவில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சிறார்கள்; புனே போலீஸ் மீது வழக்கு; மனித உரிமை கமிஷன் உத்தரவு

புனேயில் கொலை வழக்கு ஒன்றில் போலீஸாரிடம் சரணடைந்த சிறார்கள் 8 பேரை, போலீஸ் நிலையத்தில் ஐந்து நாட்கள் சட்டவிரோத வைத்திருந்து அடித்து உதைத்துள்ளனர். அதோடு அந்தச் சிறார்களை பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச... மேலும் பார்க்க

‘ரூ.20,000 கடனை அடை’- பிரசவத்திற்குச் செல்ல விடாமல் தடுத்த உரிமையாளர்; தாய், சிசுக்கு நேர்ந்த துயரம்

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஆனந்தன் (40) - தேன்மொழி (35) தம்பதியினர், அரக்கோணம் சாலை வெள்ளை கேட் பகுதியில் உள்ள மரக்கடையில் கடந்த 6 மாதங்களாக மரம... மேலும் பார்க்க

கோவை: வடமாநிலத் தொழிலாளியைக் கொன்று புதைத்த 6 பேர் கைது - அதிரவைக்கும் கொலைகளால் மக்கள் அச்சம்

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த 8ம் தேதியன்று மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு இடத்தில் தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் ஒரு ச... மேலும் பார்க்க

வத்தலக்குண்டு: ரௌடியைச் சுட்டுப் பிடித்த போலீஸ் - பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள சிக்கனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (54). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர்மீது இரட்டை கொலை வழக்கு உட்பட 26 குற்றவழக்குகள் உள்ளன. மேலும் கொலை வழக்கில் ஆயு... மேலும் பார்க்க

மதுரை: 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு; கொலை வழக்காக பதிவுசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம், ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற பள்ளி மாணவரின் சடலம் முட்புதர் குட்டையில் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவி... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் ரீல்ஸ் செய்த மகள்; மகனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற தந்தை; குஜராத்தில் கொடூரம்

குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த சோபியா பரூக்(22) என்ற பெண், மூன்று மாதங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. அப்பெண... மேலும் பார்க்க