செய்திகள் :

திமுக - அதிமுக: 'ஜானகி அம்மையாருக்கு கலைஞர் அளித்த பதில்'- விளக்கும் மூத்த பத்திரிகையாளர்

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கடந்துள்ள நிலையில் அரசியலில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.

இந்தத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவான தமிழக வெற்றிக் கழகம், நேற்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியது.

ஆனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களை சமர்ப்பித்த பிறகே பதவியேற்பு நடத்தப்படும் என ஆளுநர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

தவெக விஜய்
தவெக விஜய்

காங்கிரஸின் 5 உறுப்பினர்கள் தவெகவிற்கு ஆதரவு அளித்ததால் கூட்டணியின் பலம் 112 ஆக இருக்கிறது.

இருப்பினும் ஆட்சியமைக்க இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால், திமுக கூட்டணியில் உள்ள விசிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு தவெக ஆதரவு கோரி இருக்கிறது.

இதனிடையே எதிரெதிர் துருவங்களான திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், உதயநிதி துணை முதல்வராக்க வேண்டும் என்ற முனைப்புடன் திராவிட கட்சிகள் விஜய்க்கு எதிராக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக- அதிமுக கூட்டணி இணையுமா? அப்படி இணைந்தால் இரு கட்சிகளுக்கும் பின்விளைவுகளை ஏற்படுத்துமா? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

தராசு ஷ்யாம் - மூத்த பத்திரிகையாளர்
தராசு ஷ்யாம் - மூத்த பத்திரிகையாளர்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "திமுகவும், அதிமுகவும் இணைவது பின்னடைவைத் தான் ஏற்படுத்தும். ஏன் என்றால் அரசியல் களத்தில் இரண்டு கட்சிக்காரர்களும் நேர் எதிரிகள் பதவிக்காக அனுசரித்துப் போவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. 1989 ஜானகி அம்மையாருக்கு சுமார் 96 எம்எல்ஏக்கள் ஆதரவு நம்பிக்கை தீர்மானத்தில் ஆதரவு தருவதாக சொன்ன காங்கிரஸ், கடைசி நேரத்தில் காலை வாரியது. கலைஞர் வீட்டுக்கு ஆர் எம் வீரப்பன் நேரடியாக சென்று திமுக எம்எல்ஏக்கள் ஆதரவை கேட்டார்.

ஜானகி அம்மையார் தொலைபேசி மூலமாக கேட்டார். ஆனால், கலைஞர் மறுத்துவிட்டார். எனவே திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைக்காது என்று நான் கருதுகிறேன்" என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.

'புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம்; உடனே நடவடிக்கை எடுங்கள்' - ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் அழைக்காததையடுத்து, புதிய ஆட்சி அமைவது குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ம... மேலும் பார்க்க

"அதிமுக, திமுக கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சேர்ந்து ஆட்சி அமைக்க..!" - சசிகலா காட்டம்

திமுக - அதிமுக கூட்டணி என்கிற பேச்சு கடந்த இரண்டு நாள்களாக எழுந்துகொண்டிருக்கிறது. இதை எதிர்த்து அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட... மேலும் பார்க்க

விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த சிபிஐ! - ஆதரவு கடிதத்தில் உள்ளது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

TVK: "தவெக மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேபி பதில்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடி வருகின்றது. இந்த நேரத்தில், ANI-க்குக் கொடுத்த பேட்டியில் மார்க்சி... மேலும் பார்க்க

'காத்திருப்பு; எமோஷன்; கூட்டல் கழித்தல் கணக்குகள்' - எப்படியிருக்கிறது பனையூர்?| Detailed Report

தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டியிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப் பிடிக்க திரைமறைவில் காய்களை நகர்த்தி பல தரப்பினரும் முயன்று கொண்டிருக்கின்றனர். இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட... மேலும் பார்க்க

"பாஜக-வின் ஆசியோடு அதிமுக-விடம் திமுக பேசிக்கொண்டிருக்கிறது" - மாணிக்கம் தாகூர்

தவெக ஆட்சியமைக்க திமுக - அதிமுக இணைகிறது... தவெகவில் இணைந்து திமுகவிற்கு காங்கிரஸ் துரோகம் போன்ற பேச்சுகள்... விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் காங்கிரஸ் மீதான விமர்சனங்களுக்கு தன... மேலும் பார்க்க