செய்திகள் :

'திமுக அரசு மதவாதிகளுடன் கரம் கோர்த்து அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டத்தை முடக்கியது!- ஆதவ் ஆவேசம்!

post image

சமூகநீத்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. இந்த விவாதத்தின் போது 'அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம்' குறித்து கடும் வாக்குவாதம் எழுந்தது.

கோவி.செழியன்
கோவி.செழியன்

திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், 'ஆதிதிராவிட மக்களுக்காக திமுக எதையும் செய்யாததை போல அமைச்சர் பேசியிருக்கிறார். தீப்பிடித்து எரியாத கான்க்ரீட் வீடுகளை தலித் மக்களுக்கு கட்டிக் கொடுத்தது திமுகதான். மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராமை அழைத்து வந்து அந்தத் திட்டத்தை கலைஞர் ஆரம்பித்தார். ஜெகஜீவன் டெல்லி சென்று இந்திராவிடம் அதை கூறினார். அதன்பிறகுதான்.

இந்தியா முழுவதும் ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தை செயல்படுத்தியது திமுகதான்.

ஆதிதிராவிடனை கோவில் அறங்காவலராக நியமித்தது கலைஞர்தான்' என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ், 'பெரியார், கலைஞரின் கனவான அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தீர்கள். ஆனால், எத்தனை பேர் அந்தத் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் ஆகினார்கள்? ஐந்து வருடமும் அந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினீர்களா? அந்த டேட்டாவை நாங்கள் கொடுக்கிறோம்' என்றார்.

அமைச்சர் ஆதவ்வின் கேள்விக்கு பதில் கூறிய முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 32 பேரை அர்ச்சகராக்கினோம். நீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். ஆகமக் கமிட்டியை இறுதி செய்ய வேண்டிய உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

அமைச்சர் ஆதவ்
அமைச்சர் ஆதவ்

இந்த அரசு அதற்கு ஆறு மாதம் அவகாசம் கேட்டிருக்கிறது. நீங்கள் விரைந்து செயல்பட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ், 'சில மதவாதிகளின் அழுத்தத்தால் கேஸை போட வைத்து இவர்களே திட்டத்தை கைவிட்டிருக்கிறார்கள். நாங்கள் அந்த வழக்கில் வென்று திட்டத்தை செயல்படுத்துவோம். பெரியாரின் பெயரை உச்சரிக்க சேகர் பாபுவுக்கு அருகதை இல்லை' என்றார். கொஞ்ச நேரம் கழித்து இதற்கு பதிலளித்த சேகர்பாபு, 'மதத்தால் இனத்தால் மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் சக்திகள்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றார்கள்' என்றார்.

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க

'குற்றம்சாட்டப்பட்ட என்னுடைய மருமகள், JCD பிரபாகர், லீமா ரோஸின்..!'- விஜய் உரைக்கு இ.கருணாநிதி பதில்

நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் தி... மேலும் பார்க்க

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க