Fastag: 72 மணி நேரத்திற்குள் 'இந்த' தொகையை கட்டவில்லையா? இரண்டு மடங்கு அபராதம் -...
"திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்"- த.வா.க தலைவர் வேல்முருகன் அதிரடி
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிருப்தியில் இருந்தது.
அந்த கட்சியின் 10 அம்ச கோரிக்கையை ஏற்காதது மற்றும் கூடுதல் சீட் ஒதுக்க திமுக மறுப்பது தான் இந்த அதிருப்திக்கு காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி தலைவர் வேல்முருகன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், " சட்டமன்றத்தில் ஒற்றை ஆளாய் போராடி இருக்கிறேன். நாங்கள் முன்வைத்த எங்கள் கோரிக்கைகளை திமுக அரசு பொருட்படுத்தவில்லை.
திமுக எங்களை புறகணித்துவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அரசு அதிகாரிகளே திமுகவிடம் கூறியிருக்கின்றனர்.
சமூக நீதிக்கு எதிரான தீய சக்திகளை திமுக உடன் வைத்திருக்கிறது. இந்நிலையில் நாங்கள் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.















