போலீஸிடம் இருந்து தப்பிக்க 4-வது மாடி சன்ஷேடில் பதுங்கிய திருடர்; கீழே விழுந்து ...
திமுக ரூட்டில் தவெக... மாற்றுக் கட்சியினரை அதிகளவில் இணைக்கும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
மதுரை, தேனி, மாவட்டங்களில் த.வெ.க. சார்பில் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் விழா கடந்த சனிக்கிழமையன்று நடைப்பெற்றது.
மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் த.வெ.வில் இணைந்தனர்.
கடந்த தி.மு.க ஆட்சியின்போது அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உட்பட பலரும் அவர்களுடைய கட்சிகளிலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தனர்.
இதனால் நீண்ட காலம் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு பதவிகள் கொடுக்காமல் புதிதாக மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கே பதவிகள் வழங்கபடுவதாக தி.மு.க - விற்குள்ளேயே உட்கட்சி பூசல் தொடங்கியது.
தற்போது திமுக-வின் ரூட்டைப் பிடித்து கொண்ட த.வெ.க வும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்களை அதிகளவில் இணைத்து வருகின்றனர்.

மேலும் இணைப்பு விழாவின்போது பிரியாணியும் பரிமாறியதோடு, அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளைப் போல சாலையின் இருபுறமும் கட்சி கொடிகள், பேனர்கள் வைத்து ஒவ்வொரு விழாவையும் பிரமாண்டமாக நடத்த துவங்கியுள்ளனர்.
ஏற்கனவே அ.தி.மு.க - வைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க -வில் இணைந்தது சர்ச்சையானது.
இந்த நிலையில் கட்சியின் உள்ள கீழ் மட்ட தொண்டர்களையும் த,வெ.கவில் இணைத்து வருவதால் சொந்த கட்சியினருக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகும் என இப்போதே புலம்ப தொடங்கி விட்டனர் அக்கட்சியினர்.













