செய்திகள் :

`திமுக-வின் அடிமையாக இருக்கிறது தமிழக காங்கிரஸ்!' - தவெக நோக்கி கிளம்பிய சோனியாவின் தேர்தல் ஏஜென்ட்?

post image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.

வரும் மே மாதம் புதிய சட்டசபை அமைக்கப்பட வேண்டுமென்பதால் ஏப்ரல் மாதம் தேர்தல் இருக்கும்.

அதற்கான அறிவிப்பு, பிப்ரவரி முதல் வாரத்தல் வரலாமென எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தச் சூழலில் அரசியல் கட்சிகள் கூட்டணி, சீட் பேரம் என பரபரப்பாகத் தொடங்கி விட்டன.

தமிழகத்தில் தற்போது திமுக அதிமுக தவிர இந்த வருடம் தவெக தேர்தல் களம் காண்பதால் அந்தக் கட்சியுடன் எந்தக் கட்சிகள் கூட்டணிக்குச் செல்லும் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

’ஆட்சியில் பங்கு’ என்கிற ஒரு தூண்டிலை வீசிக் காத்திருக்கிறார் நடிகரும் தவெக தலைவருமான விஜய்.

இதுவரை அந்தக் கட்சியுடன் கூட்டணிக்கு எந்தப் பெரிய கட்சியும் செல்லவில்லை.

அதிமுகவுடன் முரண்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திமுகவுடன் முரண்பட்ட நாஞ்சில் சம்பத் போன்ற சில முக்கிய முகங்கள் அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஒரு சாரார், விஜய் கட்சிக்கு கூட்டணிக்கு செல்லலாம் என்கிற கருத்துகளைப் பேசி வருகின்றனர்.

சூர்ய பிரகாசம்

ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி முதலில் இந்த விஷயத்தைக் கொளுத்திப் போட, தற்போது அவருக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயே அறிக்கைகள் பறந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல் ஆளாக தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து பகிரங்கமாகவே கட்சிக்கு அறிவித்து விட்டு தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கட்சியின் சொத்து பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும் முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவருமான சூர்யபிரகாசம்

அவரிடம் பேசினோம்.

 ‘’75ம் வருஷம் சென்னையின் மாணவர் காங்கிரஸ் தலைவரா இருந்தவன். இந்திரா காந்தி காலத்துல இருந்து இப்ப வரைக்கும் 45 வருஷத்துக்கும் மேல் கட்சிக்காகப் பாடுபட்டிருக்கேன். வழக்கறிஞர் பிரிவுத் தலைவரா நான் இருந்த காலத்துல கட்சி வழக்குகள் எல்லாவற்றிலும் ஆஜர் ஆகி வாதாடி இருக்கேன்.

இப்பவும் சொத்து பாதுகாப்பு குழுவில் உறுப்பினரா போட்டிருக்காங்கன்னா கட்சியில எவ்வளவு சீனியரா இருப்பேன்னு பார்த்துக்கோங்க.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை
செல்வப் பெருந்தகை

ஆனா தேர்தல்னு வரும் போது என்னை மாதிரி களத்துடன் நேரடியா தொடர்புடைய ஆளுங்க கருத்தைக் காது கொடுத்துக் கேக்கவே மாட்டேங்குறாங்க.

இன்னைக்கு கள நிலவரம், ஆளுங்கட்சிக்கு சாதகமா இல்லை. எல்லா இடத்துலயும் ஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கு. இதைச் சொன்னா கட்சியில புரிஞ்சுக்கல. மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கட்சியை திமுகவின் அடிமையாகவே வச்சிருக்கார். ஆளுங்கட்சிக்கு ஆதரவா இருந்தா கள நிலவரத்தை தேசிய தலைமைக்கு எப்படிச் சொல்வாங்க?

சோனியா காந்தி
சோனியா காந்தி

சில சோர்ஸ் மூலமா அகில இந்திய தலைமைக்கு விஷயத்தை எடுத்துட்டுப் போனேன். அது ஒர்க் அவுட் ஆகலை. அதனால வேற வழியில்லாமத்தான் ராஜினாமா செய்ய வேண்டியதாகிடுச்சு’’ என்றவர், இன்னொரு விஷயதையும் பகிர்ந்தார்.

‘கட்சியில அகில இந்திய தலைவர் தேர்தல் நடந்தப்ப தலைவர் பதவிக்கு சோனியா காந்தியும் எதிர்த்து சரத் பவாரும் போட்டியிட்டாங்க. அப்ப சோனியா காந்திக்கு தமிழ்நாட்டுல தேர்தல் ஏஜென்ட்டா இருந்தவன் நான்’ என்பதுதான் அது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அடுத்து, தவெகவில் சேர்கிறீர்களா எனக் கேட்டதற்கு, அது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் எனக்குத் தெரிய அந்தக் கட்சிக்கு  ஆதரவு தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது’ என்கிறார்.!

`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' - சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7-ம் தேதி வருகை தர உள்ளார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மேடைக... மேலும் பார்க்க

'திமுக, அதிமுக, தவெக' - யாருடன் கூட்டணி? பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய பிரேமலதா!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னமும் கூட்டணி முடிவை எடுக்காமல் இருக்கிறது தேமுதிக. திமுக, அதிமுக என இரண்டு தரப்பும் தேமுதிகவுக்கு வலை விரிக்கிறது.தேமுதிக மா.செக்கள் கூட்டம்9 ஆம் தேதி கடலூரி... மேலும் பார்க்க

India - America:``என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம்"- பிரதமர் மோடிக்கு 'செக்' வைக்கும் ட்ரம்ப்!

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா. அதன்பிறகும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததாகக் கூறி இந்திய பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதி... மேலும் பார்க்க

"அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" - காங். எம்.பி மாணிக்கம் தாகூர்

"அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதுதானே" என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாகி இருக்கி... மேலும் பார்க்க

வெனிசுலா: ``உலகின் காவலராக எந்த நாடும் செயல்பட முடியாது" - சீனாவின் விமர்சனமும் புதிய சிக்கலும்!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கடந்த 3-ம் தேதி அவரை அமெரிக்க அரசு சிறைப்பிடித்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக க... மேலும் பார்க்க

"ஒட்டுமொத்த பாரதத்தில் மிகப்பெரிய ஊழல் கட்சி, ஆட்சி என்றால் அது திமுக-தான்!" - அமித் ஷா

ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சிபுதுக்கோட்டை தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' யாத்திரை நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச... மேலும் பார்க்க