செய்திகள் :

திமுக வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் 'திடீர் என்ட்ரி' - ஸ்டாலின் 'டிக்' செய்த பட்டியலில் மாற்றம்?!

post image

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான கூட்டணி இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறது. இருப்பினும், கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க ஆகியவற்றுடன் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தாலும், அதில் சுமுகமான தீர்வை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், எதிர்பாராத விதமாக வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் 'க்ராஸ் டாக்' கட்சித் தலைவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.

தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், கடைசி நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு சில தொகுதிகளில் மாற்றங்களைச் செய்திருப்பதாகவும், குறிப்பாக தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தருவதில் உதயநிதி காட்டிய பிடிவாதம், ஏற்கெனவே இறுதி செய்யப்பட்ட பட்டியலில் கூட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஸ்டாலின்

வேட்பாளர் தேர்வில் சென்னை மாவட்டத் தொகுதிகளில்தான் உதயநிதியின் தலையீடு அதிகமாக இருந்துள்ளது என்கிறார்கள் உடன் பிறப்புகள். தி.நகர் தொகுதியைக் கூட்டணிக்கு ஒதுக்கலாம் எனத் தலைமை ஒரு கட்டத்தில் முடிவு செய்திருந்தது. ஆனால், கடந்த முறை கருணாநிதிக்குக் கொடுத்தது போல, இந்த முறை ராஜா அன்பழகன் தரப்பிற்கு அல்லது அவரது மகனுக்கு வழங்க வேண்டும் என உதயநிதி விடாப்பிடியாக நின்றதாக தெரிகிறது.

அதேபோல், விருகம்பாக்கம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா மீது புகார்கள் இருந்ததால், அந்தத் தொகுதியைத் தே.மு.தி.க-வுக்குத் தரலாம் அல்லது வேறு ஒருவரை நிறுத்தலாம் எனத் தலைமை யோசித்தது. ஆனால், அங்கும் தனது ஆதரவாளருக்கே சீட் வேண்டும் என உதயநிதி விடாப்பிடியாக நின்றதால் அத்தொகுதி விவகாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.

அண்ணாநகர் தொகுதியில் கடந்த ஒரு மாதமாக அண்ணாநகர் கார்த்திக் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். ஆனால், சென்னை மாவட்டச் செயலாளரான சிற்றரசுவை அங்கே களமிறக்க வேண்டும் என உதயநிதி வலியுறுத்தியதால், கார்த்திக்கிற்கு அண்ணாநகர் கைநழுவியுள்ளது.

அதற்கு மாற்றாக அவருக்கு வில்லிவாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்தால், வில்லிவாக்கத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்த ரங்கநாதனின் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மற்றொரு பரபரப்பான நகர்வாக, தனது தீவிர ஆதரவாளரான ஜோயலை, நடிகர் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியில் நிறுத்தலாமா என்பது குறித்து உதயநிதி தீவிரமாக ஆலோசித்துள்ளார். இப்படி தமிழகம் முழுவதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனது ஆதரவாளர்களைக் கொண்டு வர உதயநிதி காய்நகர்த்தியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே 'டிக்' செய்து, அச்சுக்குத் தயாராக இருந்த பட்டியலில், உதயநிதி புகுந்து மாற்றங்களைச் செய்திருப்பது தலைமையைக் கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாம். இருப்பினும், உதயநிதியின் கோரிக்கைகளைப் புறக்கணிக்க முடியாத சூழலில், அவர் பரிந்துரைத்த இடங்களைச் சேர்க்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றனவாம்.

கடைசி நேரப் பரபரப்புகளால் அண்ணா அறிவாலயமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இன்று மாலை வெளியாகும் அதிகாரப்பூர்வ பட்டியலில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'என் பிரசாரத்தை மட்டும் ஏன் தடுக்குறீங்க?' - கொந்தளிக்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பெரம்பூரின் தேர்தல் அதிகாரி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்திருக்கின்றார். இதற்கு எதிராக விஜய் கொந்தள... மேலும் பார்க்க

சென்னை: மாணவியின் பாலியல் புகார்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு கைது!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும்... மேலும் பார்க்க

பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு? நிர்வாகிகள் அவசர ஆலோசனை! - நிலவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை அவர் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்துள்ளார் என்கிற தகவல் வெளி... மேலும் பார்க்க

சூரியனில் மறையும் பம்பரம்: `இது கூட்டணி அல்ல,எங்களை அழிக்கும் திட்டம்!'- மதிமுக நிர்வாகிகள் குமுறல்

"சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம். இதுதான் எங்கள் நிலைமை. திமுக எங்களுடைய தரத்திற்கு தகுந்த மாதிரி எண்ணிக்கை கொடுக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. அதேபோ... மேலும் பார்க்க

`பழனி தொகுதி, பாஜக-விற்கே வேண்டும்’ - தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினர்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த பட்டியலை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழன... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி அனுப்பிய மெசேஜ்; கலர் மாறும் கோவை தெற்கு தொகுதி! - திமுக நிர்வாகிகள் ஷாக்!

திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இன்றுக்குள் இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை அல்லது நாளை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் கொங்கு... மேலும் பார்க்க