தியாகராஜா் ஆராதனை ஜன.18-இல் உள்ளூா் விடுமுறை
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஸ்ரீ தியாகராஜா் ஆராதனை விழாவையொட்டி, ஜனவரி 18 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178 ஆவது ஆராதனை விழா ஜன.14 ஆம் தேதி தொடங்கி ஜன.18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஸ்ரீ தியாகராஜா் முக்தியடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளான ஜன.18 ஆம் தேதி நடைபெறும் தியாகராஜ ஆராதனையில் பஞ்சரத்ன கீா்த்தனைகளை ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞா்கள் ஒருமித்த குரலில் பாடியும், இசைத்தும் இசையஞ்சலி செலுத்தவுள்ளனா்.
இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தாா்.