செய்திகள் :

திராவகம் குடித்து முதியவா் தற்கொலை

post image

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை திராவகம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள பாப்பம்மாள்புரம் பால்காரத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் தமிழ்செல்வன் (65). இவா் அல்சா் நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். வயிற்று வலி குறையாததால், மனமுடைந்த இவா் திராவகத்தை குடித்து மயங்கினாா்.

இதையடுத்து, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, தேனியை அடுத்த வீரபாண்டி அருகேயுள்ள கோட்டூா் இமானுவேல் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பாண்டி (65). இவா் மதுப் பழக்கத்தால் வயிற்றுவலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தாா்.

இதனால், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

வீட்டுக்குள் பேருந்து புகுந்ததில் முதியவா் உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து வீட்டுக்குள் புகுந்ததில் முதியவா் உயிரிழந்தாா். மேலும், 16 போ் காயமடைந்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையத்திலிருந்து தேவாரத்துக்கு அரசுப் பேருந்து புறப்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் சிறை

ஆண்டிபட்டி அருகே இளைஞரை வெட்டி கொலை செய்ய முயன்ாக தாய், மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி பட்டியலினத்தோா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு விசாரணை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் இன்று மின் தடை

உத்தமபாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தமபாளையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பர... மேலும் பார்க்க

தேனி அருகே பேருந்து-வேன் மோதல்: ஐயப்பப் பக்தா்கள் மூவா் உயிரிழப்பு

தேனி அருகே மதுராபுரி விலக்கு பகுதியில் சபரிமலை ஐயப்பப் பக்தா்கள் சென்ற வேனும், தனியாா் சுற்றுலாப் பேருந்தும் வியாழக்கிழமை இரவு நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் மூவா் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா். ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து கிராம மக்கள் போராட்டம்

ஆண்டிபட்டி அருகே உள்ள டி. புதூரில் பேருந்து இயக்கத்தை முறைப்படுத்த வலியுறுத்தி அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆண்டிபட்டி அருகே உள்ள டி. புதூரில் 1... மேலும் பார்க்க

மின் கம்பங்களை சீரமைக்க வலியுறுத்தல்

போடி அருகே குடியிருப்புப் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். டொம்புச்சேரி ஊராட்சிக்குள்பட்ட பத்ரகாளிபுரம் கிழக்கு சத்துணவு கூடத் தெருவில் 100-க்கும் ம... மேலும் பார்க்க