செய்திகள் :

திருச்சி: போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் உயிரிழப்பு; போலீஸார் விசாரணை

post image

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் அருகே உள்ள கால்மந்தை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர், அப்பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் உயிரிழந்து கிடந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று விசாரித்ததில் அவர் அருகே போதை ஊசி கிடந்துள்ளது. அவர் உடலை மீட்ட போலீஸார் உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு, போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் போதை ஊசி செலுத்திக்கொண்டபொழுது ராஜமாணிக்கம் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அவருக்கு போதை ஊசி எங்கிருந்து கிடைத்தது, முதன்முறையாக போதை ஊசி செலுத்திக்கொள்கிறாரா அல்லது தொடர்ச்சியாக அவர் செலுத்திக்கொள்வாரா என்பது குறித்தெல்லாம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த ராஜமாணிக்கம்
உயிரிழந்த ராஜமாணிக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு அரியமங்கலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து போதை ஊசி செலுத்திக்கொண்ட பொழுது உயிரிழந்த நிலையில், இன்று மற்றொரு இளைஞர் போதை ஊசியால் உயர்ந்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது.

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் உறவுக்காரப் பெண்ணை Follow செய்த நபர்; கொலையில் முடிந்த பேச்சுவார்த்தை; குஜராத்தில் பகீர்

குஜராத் மாநிலம் போடாட் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராமில் பெண்ணிற்குக் கொடுக்கப்பட்ட நட்பு கோரிக்கை கொலையில் முடிந்துள்ளது. காஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜ், சக்திசிங் என்பவரின் உறவினரான ஒரு பெண்ணுக்... மேலும் பார்க்க