செய்திகள் :

மயிலாடுதுறையில் ஆணவக் கொலையா? காதலித்து வந்த இளைஞர், மாணவி இருவரும் மர்ம மரணம் - போலீஸ் விசாரணை

post image

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் பார்த்திபன் வயது 19. கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.

அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். 16 வயது மைனரான இவரது மகள் 12ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர இருந்தார். வெவ்வேறு ஊராக இருந்தாலும் பார்த்திபன், மாணவி இருவரது வீடும் 200 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளது.

பார்த்திபனும் மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் இரு வீட்டுக்கும் தெரிந்துள்ளது. பார்த்திபன் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மாணவி வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. லட்சுமி காந்தன் தரப்பில் பார்த்திபன் குடும்பத்தை கடுமையாக பேசியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை பார்த்திபன் தரப்பில் பொறையாறு காவல் நிலையத்தில் லட்சுமிகாந்தன் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளனர். லட்சுமி காந்தன் தரப்பிலும் புகார் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை இருவரது வீட்டுக்கு அருகில் உள்ள கீற்றுக் கொட்டகையில் பார்த்திபனும், மாணவியும் மர்மமான முறையில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். பார்த்திபன் குடும்பத்தினர் ஆணவ கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும் ஆத்திரத்தில் சிறுமி வீட்டின் முன்பகுதி, டூவீலர்களை அடித்து சேதப்படுத்தினர்.

இதனால் சம்பவ இடத்தில் 30 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இது விசாரித்த போது, பட்டியல் இளைஞரான பார்த்திபன், மாற்று சமூகத்தைச் சேர்த்த மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதனை மாணவி வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இப்பிரச்னை தொடர்ந்த நிலையில் நேற்று இரவு இருவரும வீட்டில் இல்லை என்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு சென்றார்களா என்று தெரிய வில்லை. இருவரும் நல்ல உடை அணிந்திருந்த நிலையில் அருகருகே தூக்கில இறந்து தொங்கினர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணவக் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும்.

போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம்: 12 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை; அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக் காப்பாளர் கைது

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெள்ளிமாடுகுந்நு பகுதியில் அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்கள் இந்தச் சீர்திருத்தப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மதுபோதையில் ஒரே நாளில் மூவர் கல்லால் அடித்துக் கொலை - குமரியில் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புதுகிராமம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமானப் பணி நடந்து வருகிறது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் அங்கு வேலை செய்துவருகின்றனர். ச... மேலும் பார்க்க

கரூர்: டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை!

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது: 48). இவர், மறவாபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் இரவு 10 மணியளவ... மேலும் பார்க்க

காரில் வெடித்த நாட்டு வெடிகுண்டு; நூலிழையில் உயிர் தப்பிய காதலி; உடல் கருகி பலியான காதலன்!

கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டத்தில் கல்லம்பெல்லா பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து, தீ பற்றியது. காரிலிருந்த கார் ஓட்டுநரும், பெண்ணும் உயிர் தப்பிய நிலையில்,... மேலும் பார்க்க

பேத்தி மீது அதிக பாசம் காட்டிய தாத்தா - பாட்டி; ஆத்திரத்தில் சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற அத்தை!

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா (5) ஆகிய இரட்டை குழந்தைகள். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில்உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டுக்கு ... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: ஹோட்டல் பெண் வரவேற்பாளரிடம் பாலியல் சீண்டல்... தலைமறைவான பயண முகவரைத் தேடும் போலீஸார்

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் நகரில் வசித்து வருபவர் ராஜா. இவர் ராமேஸ்வரத்தில் ஶ்ரீ பாலாஜி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பயண முகவராகவும... மேலும் பார்க்க