செய்திகள் :

DMK Files: அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு

post image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணாமலை வெளியிட்ட 'திமுக பைல்ஸ்' என்ற வீடியோவில், திமுக தலைவர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், டி.ஆர். பாலு சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.

அண்ணாமலை - டி.ஆர் பாலு
அண்ணாமலை - டி.ஆர் பாலு

தன் மீது அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவை என்றும் கூறி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர். பாலு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இத்தனை மாதங்களாக நீதிமன்றத்தில் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் நடந்து வந்த நிலையில், தற்போது இந்த அவதூறு வழக்கை டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் இருந்து முழுமையாக வாபஸ் பெற்றிருக்கிறார்.

இன்று கர்நாடகாவில் SIR: 11 பாயின்ட்டுகளில் தேர்தல் ஆணையத்திற்கு `செக்' வைக்கும் கர்நாடகா அமைச்சரவை!

இன்று (ஜூன் 30, 2026) முதல் கர்நாடகாவில் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குகிறது.இந்தச் சிறப்பு தீவிர திருத்தம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து கர்நாடகா அமைச்சரவை சில அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையத்த... மேலும் பார்க்க

'எங்கள் பங்கு தண்ணீரில் கை வைத்தால், கையை வெட்டுவோம்' - இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்

கடந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்ததையொட்டி, இந்திய அரசு பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.இந்த நதியை நம்பிதான் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதி... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ முறைகேடுகளை வெட்ட வெளிச்சமாக்கிய மாணவர் - 1.66 கோடி கொள்முதல் தரவுகளை வெளியிட்டு அதிரடி

சிபிஎஸ்இ வாரியத்தின் டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு டெண்டரில் உள்ள முரண்பாடுகளை ஆய்வு செய்து, தேசிய அளவில் கவனம் ஈர்த்த 12 ஆம் வகுப்பு மாணவர் சார்தக் சித்தாந்த், தற்போது மத்திய அரசின் கொள்முதல் தரவு... மேலும் பார்க்க

'கத்தாரில் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த்தை?' - ட்ரம்பின் ட்வீட்டும், ஈரானின் மறுப்பும்

ஈரான், அமெரிக்கா - இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலுக்குப் பிறகு, பேச்சுவார்த்தை மேசைக்கு வந்திருக்கிறது. ஆனால், அதிலும் குழப்பம் நிலவுகிறது.நேற்று (ஜூன் 29, 2026) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அனுமதி! - ஆளுநருக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் முன்னாள் அமைச்சர்களான வி. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை (ED) கோரியுள்ள அனுமதி தொடர்பான கோப்புகளை விரைந்து பரிசீ... மேலும் பார்க்க

கரையும் அதிமுக... தனித்துவிடப்பட்ட திமுக! – தமிழக அரசியல் களத்தில் மாறும் அதிகாரச் சமன்பாடுகள்!

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கடந்த ஐந்து தசாப்தங்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மைய சக்திகளாக இருந்து வந்துள்ளன. ஆனால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு உருவாகியுள்ள பு... மேலும் பார்க்க