செய்திகள் :

திருச்சி: வண்டல் மண் எடுக்க ரூ.4,000 லஞ்சம் - நீர்வளத்துறை அதிகாரி கைது!

post image

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தைச் சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட். இவர், முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளுவதற்கு நீர்வளத்துறை பணி ஆய்வாளர் லோகநாதன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அவரோ, வண்டல் மண் எடுப்பதற்கு ரூ.4,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத எட்வர்ட், இது தொடர்பாக நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். 

கைது

அவர் கொடுத்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது எட்வர்டிடமிருந்து லஞ்சப் பணம் ரூ.4000-த்தை புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளர் லோகநாதன் கேட்டு பெற்று வைத்திருந்தபோது, கையும் களவுமாகப் பிடிபட்டார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட நீர்வளத்துறை, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு-1 உதவி பொறியாளர் அலுவலகத்தில் திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர். வண்டல் மண் எடுக்க நீர்வளத்துறை அதிகாரி லஞ்சம் கேட்டு கைதான சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர்: தாய், மகளுக்கு கத்திக் குத்து; பலியான தாய்... சிகிச்சையில் மக்கள்! - என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் அருகே எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி பாப்பாம்மாள் (வயது: 65). இவர் மகள் மஞ்சுளா (வயது: 42). இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொலைசெய்து உடலின் மீது சர்க்கரை தூவியது ஏன்? - சிக்கிய ஜோடியின் 'பகீர்' வாக்குமூலம்!

ஒரு கொலை... அதை மறைக்கத் தமிழ் சினிமா பாணியில் போடப்பட்ட திட்டம்... ஆனால், வெறும் 5 மணி நேரத்தில் அத்தனை ‘ஸ்கெட்சையும்’ காலி செய்து, கொலையாளிகளைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறது காவல்... மேலும் பார்க்க

சாமியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கோயில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற நபர்கள் - வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாகக் கருதப்படும் நாக்பூரில் உள்ள ஷிட்லா தேவி கோயிலில் மர்ம் நபர்கள் இரண்டு பேர் நுழைந்து, அங்கிருந்த உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கோயில் பொறுப்பாளர் ... மேலும் பார்க்க

அரக்கோணம்: கார் ஷெட்டில் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள்; சிக்கிய இருவர்; பின்னணி என்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஜவ்வாது மலைத்தொடரில், இயற்கையாகவே மிக உயர்தரமான சந்தன மரங்கள் விளைகின்றன. இங்கிருந்து வெட்டப்படும் சந்தன மரங்களைச் சேகரிக்கவும், பாதுகாப்பாகப் பராமரிக்கவும் அரை ... மேலும் பார்க்க

`அவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்கிறார்' - மதுவில் விஷம்; கணவனை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி

குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரை சேர்ந்தவர் ஜிக்னேஷ். இவரது மனைவி பிரித்வி. ஜிக்னேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதாக பிரித்வி அவரின் உறவினர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த நிலையில... மேலும் பார்க்க

தூத்துக்குடி த.வெ.க நிர்வாகி மீது இளம்பெண் மிரட்டல் புகார் - போலீஸார் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த த.வெ.க.வைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், த.வெ.க. நிர்வாகிகள் 2 பேர் தன்னை... மேலும் பார்க்க