செய்திகள் :

திருச்சி: வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் - முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதா கைது!

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், பாம்பாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி ( 30) என்பவரின் தந்தை கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அவர் அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த மனு தொடர்பாக வி.பெரியப்பட்டி பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவை அணுகியபோது, மனுவை விரைந்து பரிசீலித்து சான்றிதழ் வழங்குவதற்காக முதலில் ரூ.5,000 லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது.

பின்னர், புகார்தாரரின் வேண்டுகோளின் பேரில் ரூ.4,000 ஆக குறைத்து கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லஞ்சம் வழங்க விருப்பமில்லாத ஈஸ்வரி, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரை ஆய்வு செய்த அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து, லஞ்ச ஒழிப்பு பொறிவைப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டனர்.

அதன்படி, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் தனிப்படை அதிகாரிகள் இணைந்து வி.பெரியப்பட்டி பிர்கா அலுவலகத்தில் பொறிவைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ri

அப்போது, புகார்தாரரிடம் இருந்து ரூ.4,000 லஞ்சத் தொகையை ஹேமலதா பெற்றுக்கொண்ட உடனேயே, அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதோடு, லஞ்சமாக பெறப்பட்ட பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஹேமலதாவிடம் விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

மேலும், அவரது இல்லத்திலும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். லஞ்சம் பெற்ற வழக்கில் வருவாய் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க