திருச்சி: 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை! - நீத...
திருச்சி: வியாபாரியிடம் நூதன முறையில் மோசடி; போலி SMS-ஐ நம்பி லட்சங்களைப் பறிகொடுத்த பரிதாபம்
திருச்சி, வயலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோ பிராங்க் சுரேந்திரன். இவர், பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் வயலூர் ரோடு பகுதியிலுள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம்-ல் பணம் எடுத்து உள்ளார்.
பிறகு, இவருடைய செல்போனில் வாட்ஸ் அப் மூலம் பணம் எடுத்ததற்கான உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி வந்து உள்ளது. அதில், அவர் ஆம் என்று திரும்பி பதிலளித்தார். பிறகு, சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 4 லட்சத்து 98 ஆயிரத்து 833 பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேந்திரன் உடனடியாக சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆன்லைனில் ரூபாய் 4 லட்சத்து 98 ஆயிரத்து 833 பணத்தை மோசடி செய்து எடுத்த மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர். ஏ.டி.எம்-மில் பணம் எடுத்த உடன் எந்த வங்கியிலும் பணம் எடுத்தீர்களா என மெசேஜ் அதேபோன்று கிரெடிட் கார்டு முலம் பொருட்கள் வாங்கிய பின் உங்கள் கிரெடிட் லிமிட் உயர்த்த வேண்டுமா உடனே என மெசேஜ் வந்தாலும் இந்த மெசேஜ்க்கு ஆம் இல்லை என்று பதில் அளித்து நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பாக்கு மட்டை தயாரிக்கும் வியாபாரியிடம் பல லட்சம் முறைகேடு செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.










.jpeg)








