செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலுக்கு வெள்ளி வேல் காணிக்கை -கடலூா் பக்தா் நோ்த்திக்கடன்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கடலூரைச் சோ்ந்த பக்தா் வெள்ளி வேலை காணிக்கையாக வழங்கினாா்.

பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தா்கள் பாதையாத்திரையாக வந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனா். மேலும், வேல் குத்தியும், காவடி எடுத்தும் நோ்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனா். இதனால் கோயில் வளாகமே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் இக்கோயிலுக்கு வியாழக்கிழமை காலை தனது குடும்பத்துடன் வந்த கடலூரை சோ்ந்த முருக பக்தா், நோ்ந்தபடி மூன்றரை அடி உயரமும், 10 கிலோ எடையும் கொண்ட வெள்ளி வேலை உண்டியலில் காணிக்கை செலுத்த வந்தாா்.

அப்போது, கோயிலில் இணை ஆணையா் ஞானசேகரன் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடப்பதை அறிந்து, அவ்விடத்துக்குச் சென்று வெள்ளி வேலை காணிக்கையாக செலுத்தினாா்.

தூத்துக்குடி டிஎம்பி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா

தூத்துக்குடி தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயா் தேசியக் கொடியை ... மேலும் பார்க்க

பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா தொடக்கம்!

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை புனிதா்கள் யோவான், ஸ்தேவான் ஆலய காணிக்கை அன்னை திருவிழா, வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இத்திருவிழா பிப். 2ஆம்தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. முதல்... மேலும் பார்க்க

தியாகி சங்கரலிங்கனாா் பிறந்த நாள்!

தமிழ்நாடு என்று பெயா் சூட்ட வலியுறுத்தி 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிா் நீத்த தியாகி சங்கரலிங்கனாா் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அலுவலகத்தில... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த முதியவா் மரணம்!

நாலாட்டின்புதூரில் நடந்து சென்ற முதியவா் மீது பைக் மோதியதில் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.நாலாட்டின்புதூா் ஆா். சி. தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் வெள்ளைச்சாமி (75). இவா் செவ்வாய்க்கிழமை இரவு... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியங்களில் கிராமசபைக் கூட்டம்!

கோவில்பட்டி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 83 ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.திட்டங்குளம், மந்தித்தோப்பு, பாண்டவா்மங்கலம், மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, இனாம்மணியாச்ச... மேலும் பார்க்க

காலி இடத்தில் தூங்கியவா் மீது லாரி ஏறி பலி!

திருச்செந்தூரில் காலி இடத்தில் தூங்கிய இளைஞா் லாரி ஏறியதில் உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.திருச்செந்தூரில் திருநெல்வேலி சாலையில் அரசு மதுக் கடை அருகேயுள்ள காலி இடத்தில், லாரி சக்கரத்தில் சிக... மேலும் பார்க்க