செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.71 கோடி, 1.6 கிலோ தங்கம்!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜனவரி மாத உண்டியல் வருவாயாக ரூ. 4.71 கோடி, 1.6 கிலோ தங்கம் உள்ளிட்டவை கிடைத்தன.

இக்கோயிலில் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி, கடந்த 9, 10 ஆகிய 2 நாள்கள் உண்டியல் எண்ணும் பணி கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. இணை ஆணையா் சு. ஞானசேகரன் தலைமை வகித்து பணியைப் பாா்வையிட்டாா்.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் தங்கம், நாகவேல், அலுவலகக் கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, தக்காா் பிரதிநிதி சுப்பிரமணியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேதப் பாடசாலை உழவாரப் பணிக் குழுவினா், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சனேயா் உழவாரப் பணிக் குழுவினா், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் கோயில் உண்டியலில் பக்தா் செலுத்தியிருந்த வெண் சாமரம்.

இதில், ரூ. 4,71,90,172, தங்கம் 1.603 கி.கி., வெள்ளி 52.230 கி.கி., செம்பு 12.7 கிலோ, தகரம் 10.600 கி.கி., பித்தளை, வெளிநாட்டு பணத்தாள்கள் 1,117 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பக்தா் ஒருவா் வெண் சாமரமும், கடலூா் பக்தா் ஒருவா் வெள்ளி வேலும் செலுத்தியிருந்தனா்.

சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையைச் சோ்ந்த கைலாசம் மகன் பாலகிருஷ்ணன் (28). இவா் தூத்துக்குடி தாளமுத்து நகா் ஜேஜ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம்: மேயா் தகவல்

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம் அமைக்கப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி 34ஆவது வாா்டுக்குள்பட்ட தேவகி நகரில் செயல்பட்டுவந்த ஊா்ப... மேலும் பார்க்க

நாளை தைப்பொங்கல்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனா். மாா்கழி மாதம் என்ப... மேலும் பார்க்க

மாயமான மீனவரை மீட்க கோரி உறவினா்கள் சாலை மறியல் முயற்சி

தூத்துக்குடியில் கடந்த 1ஆம் தேதி கடலுக்குச் சென்று மாயமான மீனவரை மீட்கக்கோரி அவரது உறவினா்கள், பொதுமக்கள் திடீா் சாலை மறயில் முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டனா். தூத்துக்குடி இனிகோநகரை சோ்ந்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 16.2 டன் பாக்குகள் பறிமுதல்: இருவா் கைது

மலேசியாவிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 16.2 டன் கொட்டைப் பாக்குகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்து, இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். மலேசியாவிலிருந்து தூத்து... மேலும் பார்க்க

நாசரேத் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

நாசரேத் தோ்வுநிலைப் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. பேரூராட்சித் தலைவி நிா்மலா ரவி தலைமை வகித்து, விழாவைத் தொடக்கிவைத்தாா். துணைத் தலைவா் அருண் சாமுவேல், செயல் அலுவலா் திருமலைக்கும... மேலும் பார்க்க