செய்திகள் :

திருத்தணியில் அரி `டு' குமரியில் தளவாய் சுந்தரம் - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக

post image

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி திமுக அதிமுக என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது. இந்த நிலையில், இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டன. அதிமுக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த நிலையில், அதிமுக-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தார், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதைத் தொடர்ந்து இன்று மாலை திமுக தொகுதிப் பங்கீடு பட்டியலையும், வேட்பாளர் பட்டியலையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார், எடப்பாடி பழனிசாமி.

அதன்படி, கும்மிடிப்பூண்டி தொகுதியில் V. சுதாகர், பொன்னேரி தனித் தொகுதியில் சிறுணியம் P. பலராமன், திருத்தணி தொகுதியில் கோ. அரி, திருவள்ளூர் தொகுதியில் B V ரமணா என 127 தொகுதிகளுக்கான பட்டியலை அறிவித்திருக்கிறார்.

முழுப் பட்டியல் இதோ...

பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு? நிர்வாகிகள் அவசர ஆலோசனை! - நிலவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை அவர் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்துள்ளார் என்கிற தகவல் வெளி... மேலும் பார்க்க

சூரியனில் மறையும் பம்பரம்: `இது கூட்டணி அல்ல,எங்களை அழிக்கும் திட்டம்!'- மதிமுக நிர்வாகிகள் குமுறல்

"சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம். இதுதான் எங்கள் நிலைமை. திமுக எங்களுடைய தரத்திற்கு தகுந்த மாதிரி எண்ணிக்கை கொடுக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. அதேபோ... மேலும் பார்க்க

`பழனி தொகுதி, பாஜக-விற்கே வேண்டும்’ - தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினர்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த பட்டியலை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழன... மேலும் பார்க்க

திமுக வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் 'திடீர் என்ட்ரி' - ஸ்டாலின் 'டிக்' செய்த பட்டியலில் மாற்றம்?!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான கூட்டணி இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறது. இருப்பினும், கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி அனுப்பிய மெசேஜ்; கலர் மாறும் கோவை தெற்கு தொகுதி! - திமுக நிர்வாகிகள் ஷாக்!

திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இன்றுக்குள் இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை அல்லது நாளை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் கொங்கு... மேலும் பார்க்க

இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா? - மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சொல்வது என்ன?

ஈரான்-அமெரிக்கா- இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விநியோகத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக பல நாடுகள் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள... மேலும் பார்க்க