செய்திகள் :

திருப்பத்தூர்: புதன் சந்தையை நாற்றமடிக்க வைக்கும் கோடியூர் ஏரி – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

post image

சந்தை என்றாலே பரபரப்பும், மக்கள் கூட்டமும், வியாபாரிகளின் குரல்களும்தான் நினைவுக்கு வரும். ஆனால், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள புதன் சந்தையில் தற்போது நிலைமை வேறாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஜோலார்பேட்டை நகராட்சிக்குச் சொந்தமான கோடியூர் ஏரியை ஒட்டி, ஒவ்வொரு புதன்கிழமையும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகள் உள்ளிட்ட தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். ஏரியை ஒட்டி சந்தை அமைந்திருப்பது இந்தச் சந்தையின் சிறப்புகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் கோடியூர் ஏரி தற்போது குப்பைகள் தேங்கும் இடமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏரியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால், கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

புதன்கிழமைகளில் சந்தைக்கு வரும் மக்கள், துர்நாற்றத்தால் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ஏரியை ஒட்டி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட நேரம் அப்பகுதியில் இருப்பதால் துர்நாற்றத்தைத் தாங்க முடியாத சூழல் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“ஏரியைச் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். ஏற்கெனவே தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி, ஏரியைத் தூய்மைப்படுத்த வேண்டும். மேலும், ஏரியை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும்” என்பதே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக கூடும் முக்கியமான சந்தைப் பகுதி என்பதால், கோடியூர் ஏரியைச் சீரமைத்து, குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுத்து, புதன் சந்தையைச் சுகாதாரமான இடமாக மாற்ற ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க

'குற்றம்சாட்டப்பட்ட என்னுடைய மருமகள், JCD பிரபாகர், லீமா ரோஸின்..!'- விஜய் உரைக்கு இ.கருணாநிதி பதில்

நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் தி... மேலும் பார்க்க

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க