Delimitation: "உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!" - ஆதரவு...
திருப்பரங்குன்றம்: ``உச்ச நீதிமன்றத்திலும் இந்துத்துவ சக்திகள் கை ஓங்கியுள்ளன" - வைகோ தாக்கு!
கார்த்திகை திருநாளை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் ஒருமுறை மட்டும் வழக்கமாக தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது.
ஆனால், அந்த உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் அருகே உள்ள தீப மண்டபத்தில் மாலை தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை அமல்படுத்தவில்லை, எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி. பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (நவ. 27) விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இன்று (நவ. 29) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பு குறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக தலைவர் வைகோ, ``தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தனது வரம்பை மீறிச் செயல்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்பதே நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை.

ஆனால், திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மீறியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத்திலும் இந்துத்துவ சக்திகள் கையோங்கியுள்ளது... வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது. அது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல." என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb













