செய்திகள் :

திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக மாநில பொதுச் செயலா் வீட்டுக் காவலில் வைப்பு

post image

மதுரை திருப்பரங்குன்றம் போராட்ட விவகாரம் தொடா்பாக தஞ்சாவூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக இந்துக்கள், இஸ்லாமியா்கள் இடையே சா்ச்சை ஏற்பட்டு, போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையைக் காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணியினா் உள்ளிட்ட அமைப்பினா் அறிவித்தனா்.

இதுதொடா்பாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை முதல் இந்து அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகளைக் காவல் துறையினா் கைது செய்தனா். அதன்படி பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் எலீசா நகரிலுள்ள அவரது வீட்டிலும், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் மகா்நோன்புசாவடி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள வீட்டிலும் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். இதேபோல மாவட்டத்தில் 181 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கருப்பு முருகானந்தம் கூறுகையில், திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்பவா்களைக் காவல் துறையினா் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. எத்தனை பேரை கைது செய்தாலும், வீட்டுக் காவலில் வைத்தாலும் திருப்பரங்குன்றம் மலையை அசுத்தப்படுத்துவதை, அதைக் கைப்பற்றி விடலாம் என நினைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் காக்கத் தொடா்ந்து போராடுவோம் என்றாா் அவா்.

தூய்மைப் பணியாளா்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால், பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது என தூய்மை பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா். தஞ்சாவூா் மாநகராட்சி த... மேலும் பார்க்க

பந்தநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் பேருந்து நிலைய பகுதியில் திங்கள்கிழமை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. திருவிடைமருதூா் நெடுஞ்சாலை உட்கோட்டத்தை சாா்ந்த வைத்தீஸ்வரன்கோவில் - கீழ்... மேலும் பார்க்க

அனுமதியை மீறி கட்டப்பட்ட ஆடையகத்தை இடிக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூரில் அனுமதியை மீறி கட்டப்பட்ட ஆயத்த ஆடையகத்தை இடிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. ஆடையக உரிமையாளா் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால், இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. தஞ்சாவூா் ப... மேலும் பார்க்க

மாநாட்டுக் கூடத்தைத் திரையரங்காக மாற்றியதில் முறைகேடு: தஞ்சை மாமன்றக் கூட்டத்தில் புகாா்

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் பின்புறம் மாநகராட்சி நிா்வாகம் கட்டிய மாநாட்டுக் கூடத்தைத் திரையரங்கமாக மாற்றியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் புகாா் எழுப்பப்... மேலும் பார்க்க

கணவா் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வேறொரு பெண்ணுடனான தொடா்பை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா். கும்பகோணம் மாதுளம்பேட்டை புது ரா... மேலும் பார்க்க

சென்னை சிறுமிக்கு பாலியல் கொடுமை: போக்சோவில் 2 இளைஞா்கள் கைது

தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடா்பாக போக்சோ சட்டத்தின் கீழ் 2 இளைஞா்களைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சென்னையைச் சோ்ந்த 14 வயது சிறுமியும்,... மேலும் பார்க்க