செய்திகள் :

திருமணப் பதிவு: "பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்படும்" - விதிகளைக் கடுமையாக்கும் குஜராத்

post image

குஜராத் மாநில அரசு, திருமணப் பதிவு முறைக்கெனப் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, திருமணத்தில் பெற்றோரின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்திருக்கிறது.

அதன் அடிப்படையில், ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்வதற்கு விண்ணப்பித்தால், அது குறித்து அந்த ஜோடியின் பெற்றோருக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 10 நாள்களுக்குள், வாட்ஸ்அப் எண் அல்லது மெசேஜ் மூலமாகத் தெரிவிக்கப்படும்.

திருமணப் பதிவுக்கு ஆதார், திருமணப் பத்திரிகை மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோரின் ஆதார் போன்றவையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படும்.

மேலும், திருமணப் பதிவு விண்ணப்பம் கொடுத்த உடனே திருமணச் சான்றிதழ் கிடைக்காது. 30 நாள் இடைவேளை கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், திருமணப் புகைப்படங்கள், மற்ற சாட்சிகளின் விவரங்கள் அரசின் இணையத்தில் பதிவேற்றப்படும். குடும்ப ஆவணங்களில் குடும்ப விவரங்கள் நேரடியாக இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்

இந்த விவகாரம் குறித்துப் பேசிய குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, ``பெற்றோரின் உணர்வுகளையும், குடும்ப அமைப்பையும் பாதுகாப்பதே இந்தப் புதிய கட்டுப்பாடுகளின் நோக்கம். பல்வேறு சமூக அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன" என்றார்.

இந்தத் திட்டம் இன்னும் சட்டமாகவில்லை. தற்போது இது பொதுமக்களின் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு உடன்பாடு இருந்தாலும், தனிமனித உரிமை மற்றும் ரகசியத்தன்மை பாதிக்கப்படுவதாகச் சிலர் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். எனவே, 30 நாள் கருத்துக் கேட்புக்குப் பிறகே இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது.

NLC: விதிமீறல்களின் 'சுரங்கம்' என்.எல்.சி? சிஏஜி அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்; ஓர் அலசல்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC India Ltd), கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.இது தொடர்பாக 2017-18 ம... மேலும் பார்க்க

Chennai Rail: `வதந்திகளை நம்பாதீங்க... நாளைய சிறந்த எழும்பூருக்காக.!' - சென்னை ரயில்வே கோட்டம்

சென்னை மற்றும் சென்னை புறநகரை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் துறைகளில் வே... மேலும் பார்க்க

‘உங்கள் அண்ணன் உணர்வெழுச்சியுடன் காத்திருக்கிறேன்!’ - நாதக மாநாடு குறித்து சீமான் உருக்கம்!

பிப்ரவரி 21-ம் தேதியான இன்று திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடந்துகிறது நாம் தமிழர் கட்சி. கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் உருக்கமான மடலை வெளியிட்டுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப... மேலும் பார்க்க

கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி - நாளை கலந்தாய்வு!

கடந்த 2019 மற்றும் 2020 கோவிட் தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள், பிறகு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.அப்போது வருங்காலங்களில் ரெகுலரான பணி நியமனங்கள் நட... மேலும் பார்க்க

வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன?

வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து புதிய வருமான வரிச் சட்டம் அமலாக உள்ளது. இதனால், வருமான வரிப் படிவத்தில் இருந்து வருமான வரிக் கணக்குத் தாக்கல் வரை... இனி பல புதுப்புது மாற்றங்களைச் சந்திக்க உள்ளோம்... மேலும் பார்க்க

டிமாண்டி சாலை இனி எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை! - இசை மேதைகளின் பெயரில் சென்னை சாலைகள்!

தமிழகத்தின் திரை மற்றும் இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பங்காற்றிய பழம்பெரும் கலைஞர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில், அவர்கள் வாழ்ந்த மற்றும்... மேலும் பார்க்க