செய்திகள் :

திருவண்ணாமலை தீபம்: கட்டண தரிசனம் ரத்து; இலவச நுழைவுச் சீட்டு பெறுவது எப்படித் தெரியுமா?

post image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்திற்காக ரூ.500 மற்றும் ரூ.600 மதிப்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, நுழைவுச் சீட்டுகள் 1,600 எண்ணிக்கையில் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வந்தன.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் நலன்கருதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தலின்படி பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்திற்கான நுழைவுச் சீட்டுகள் முற்றிலும் இலவசமாக 3,000 எண்ணிக்கையில் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை

அதன்படி, வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்திற்கான நுழைவுச் சீட்டுகள் உள்ளூர் மற்றும் வெளியூர் என்ற வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதாவது, 24-ம் தேதி காலை ஏற்றப்படும் பரணி தீபத்தை தரிசிக்க திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு 500 நுழைவுச் சீட்டுகளும், பிறமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு 500 நுழைவுச் சீட்டுகளும் வழங்கப்படும்.

அதேபோல, மாலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு 1,000 நுழைவுச் சீட்டுகளும், பிறமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு 1,000 நுழைவுச் சீட்டுகளும் வழங்கப்படும்.

நுழைவுச் சீட்டுகளைப் பெறவிரும்பும் பக்தர்கள், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, திருக்கோயிலின் அதிகார இணையதளமான https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரியில் நாளை 20-ம் தேதி மாலை 3 மணிவரை முற்றிலும் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், 20-ம் தேதி மாலை 4 மணியளவில், இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்களில் கணினி மூலம் தானியங்கி குலுக்கல் ( Random Selection ) முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு, மின்னணு நுழைவுச் சீட்டினை ( e-Ticket ) பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புடன்கூடிய குறுஞ்செய்தி, அவர்கள் முன்பதிவின்போது அளித்த கைப்பேசி எண்ணிற்கும், தகவல் மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படும்.

தீப தரிசனம்

தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் தங்களுக்கான மின்னணு நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து, 24-ம் தேதி திருக்கோயிலில் அதைக் காண்பித்தால், ஸ்கேன் செய்த பின்னர் திருக்கார்த்திகை தீப தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக, ஆதார் அட்டையை அடையாளச் சான்றாகக் கொண்டு சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

பரணி தீபத்திற்கு பதிவு செய்பவரால், மகா தீபத்திற்கு பதிவு செய்ய இயலாது. மகா தீபத்திற்கு பதிவு செய்பவரால் பரணி தீபத்திற்கு பதிவு செய்ய இயலாது.

பரணி தீபத்திற்கான முன்பதிவு செய்பவர்கள் ஒரு சீட்டு மட்டுமே பதிவு செய்ய இயலும், மகா தீபத்திற்கு பதிவு செய்பவர்கள் வெவ்வேறு ஆதார் எண்ணைக்கொண்டு இரண்டு பதிவுகள் மேற்கொள்ளலாம். மேற்படி, நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் கணினி மூலம் தானியங்கி குலுக்கல் முறையில் மட்டுமே வழங்கப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஈரோடு: `கார்த்திகை 1ஆம் தேதி'... மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்! | Photo Album

ஈரோட்டில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர் ஈரோட்டில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர் ஈரோட்டில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர் ஈரோட்டில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர் ஈரோட... மேலும் பார்க்க

`அண்ணாமலையாருக்கு அரோகரா’ - கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை தீப விழா; ஏற்பாடுகள் என்னென்ன?

திருவண்ணாமலையில் `திருக்கார்த்திகை தீபத்திருவிழா’ இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கடந்த 3 தினங்களாக காவல் தெய்வங்களுக்கான வழிபாடுகள் நடந்துவந்த நிலையில், இன்று அதிகாலை நடை திறக்கப்பட... மேலும் பார்க்க

'தரிசன நேரம் முதல் பேருந்து நேரம் வரை' - சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு உதவ புதிய இணையதளம்!

தென் இந்தியாவின் புனிதத் தலங்களில் சபரிமலை மிகவும் முக்கியமானது. ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். அதிலும் மண்டலபூஜை, மகரவிளக்கு கா... மேலும் பார்க்க

சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலில் கார்த்திகைத் திருவிழா - ரோப் காரில் பயணிக்க ஆன்லைனில் முன்பதிவு!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாதத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் பயணத்துக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பத... மேலும் பார்க்க

நாகூர் தர்காவில் 470-வது கந்தூரி விழா கோலாகலம்; கொடியேற்றத்துடன் தொடக்கம்!|Photo Album

ஆன்மிகமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் நாகூர் தர்கா மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் நாகூர் ஆண்டவரின் 470-வது உரூஸ் முபாரக் விழா,... மேலும் பார்க்க